தினமும் உங்கள் உணவில் ஓட்ஸ் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்!
Pexels
By Pandeeswari Gurusamy Aug 04, 2024
Hindustan Times Tamil
மாறி வரும் வாழ்க்கை சூழலால் சமீப காலமாக நீரிழிவு நோய், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்ற பல நோய்களால் இளம் வயதினரும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதோடு முறையான உடற்பயிற்சியை கட்டாயமாக மேற்கொள்வதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
Pexels
ஓட்ஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மற்றும் ஒரு நபருக்கு இருதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று கனடிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. ஓட்ஸில் உள்ள சத்துக்கள் மற்றும் அதை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்
Pexels
ஓட்ஸில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் பி 1, மற்றும் இணை கனிமங்கள் அடங்கி உள்ளன.
Pexels
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகிறது. தினமும் ஓட்ஸை உணவில் எடுத்துக்கொள்வது நம் ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
Pexels
ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தின் போது கொலஸ்ட்ராலை உறிஞ்சி உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு பக்கவாத அபாயத்தை குறைக்கும்.
Pexels
உங்களின் அதிகப்படியான உடல் எடையை படிப்படியாக குறைக்க விரும்பினால் அதிக நார்ச்சத்து கொண்ட ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதேசமயம் ஓட்ஸ் குறைந்த கலோரிகளை கொண்டது.
pixa bay
ஓட்ஸில் அடங்கி உள்ள பீட்டா குளுக்கான் நம் உடலில் செரிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதோடு குடல் பாக்டீரியாக்களை பாதுகாக்க உதவுகிறது.