’வாழ்கையில் பண கஷ்டமே இருக்காது’ திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

By Kathiravan V
Apr 22, 2024

Hindustan Times
Tamil

சந்திர பகவான் வானவீதியில் திருவோண நட்சத்திர சாரத்தில் பிரவேசம் செய்யும் போது பிறந்தவர்களுக்கு திருவோண நட்சத்திரம் அமைகிறது. 

இந்த திருவோண நட்சத்திரம் மகரராசியில் வருகிறது. கால புருஷனுக்கு 10ஆவது இடமான மகர ராசிக்கு அதிபதியாக சனிபகவான் உள்ளார். 

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு ஜீவன வகையில் எந்த வித குறையும் வாழ்நாள் முழுக்க இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்த நட்சத்திரம் மகாவிஷ்ணு பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாசனை திரவியங்கள், பூக்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும்.

இவர்களின் தோற்றம் கம்பீரமானதாக இருக்கும். விரைவில் கோபப்படுபவர்களாக இருந்தாலும், விரைவில் அதில் இருந்து மீள்வார்கள்.

இவர்களுக்கு கல்வி நன்றாக வரும். அதே நேரத்தில் நண்பர்கள், எதிர் பாலினத்தவரின் நட்பு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

இயற்கையிலேயே சேமிப்பு குணம் பெற்றவர்களாக இருக்கும் இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்பு இருக்கும்.

இந்த நட்சத்திரத்திற்கு வசிய நட்சத்திரமாக பூராடம் நட்சத்திரம் விளங்குகிறது. இவர்களுக்குள் எளிதாக புரிதல் இருக்கும். எளிதில் ஒருவரோடு ஒருவர் அன்பு செலுத்துவர்.

ராகி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்