புதன் பகவானின் ராசியான மிதுனம் ராசியில் முழு நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் உள்ளது.
புதனின் ராசியில் உள்ளதால் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு அறிவுத்தேடலில் ஆர்வம் இருக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் உள்ளார்.
பிறப்பிலேயே சமயோஜித புத்தியை கொண்ட இவர்கள் காலத்திற்கு ஏற்றார் போல் முடிவுகளை மாற்றி எடுக்கக்கூடியவர்கள்.
இவர்களை புரிந்து கொள்வது சற்று கடினமானதாக இருக்கும். ஆனாலும் தன்னுடைய காரியத்தில் கண்ணாக இருக்கும் சுயநலவாதிகளாக இவர்கள் இருப்பார்கள்.
போக காரகனான ராகுவின் நட்சத்திரமாக திருவாதிரை வருவதால், ஆடம்பர விஷயங்களில் இவர்களுக்கு பிரியம் இருக்கும்.
இவர்களின் அறிவுத்திறனை வைத்து அதிகமாக பொருள்ளீட்டுவார்கள். கடின வேலைகளை செய்து பொருளீட்டும் வாய்ப்புகள் மிக மிக குறைவு.
திருவாதிரை நட்சத்திரத்தில்தான் நடராஜ பெருமான் அவதரித்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு முதல் தசையாக ராகு தசை உள்ளது. இந்த திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான தசா காலங்களாக குரு தசை, புதன் தசை, சந்திர தசை, சுக்கிர தசை, செவ்வாய் தசை ஆகியவை உள்ளது. திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய வசிய நட்சத்திரமாக மூலம் நட்சத்திரம் உள்ளது.
சுக்கிரன் வக்கிர நிவர்த்தி மூலம் ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள்