‘பேசியே காரியம் சாதிக்கும் அதிபுத்திசாலிகள்!’ ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!
By Kathiravan V Apr 26, 2024
Hindustan Times Tamil
புதன் பகவானின் நட்சத்திரங்களில் ஒன்றாக ரேவதி நட்சத்திரம் குரு பகவான மீன ராசிக்கு உட்பட்டு உள்ளது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் அமைப்பு துல்லியமானதாக இருக்கும்.
ஒளிவீசும் கண்களை பெற்ற இவர்கள், பிறரை ஈர்ப்பதில் வல்லவர்கள். படித்தவர்களின் அதிகம் அன்பு செலுத்தக்கூடிய இவர்கள், தர்கரீதியாக விவாதம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தான தர்மம் செய்வதில் ஈடுபாடு கொண்ட ரேவதி நட்சத்திரக்காரர்கள், இதனால் மக்களுக்கு நன்கு பரிட்சயம் ஆகிவிடுவார்கள்.
எடுத்த காரியத்தை தள்ளிப்போடாமல் விரைவில் முடிக்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்கும். மேலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு.
‘பேசியே காரியம் சாதிக்கும் அதிபுத்திசாலிகள்!’ ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!
இவர்களுக்கான வசிய நட்சத்திரமாக பரணி நட்சத்திரம் விளங்குகிறது. இவர்கள் வாழ்கையில் கணவன், மனைவியாக இணைந்தால் இருவருக்கும் பரஸ்பர அன்பு இருக்கும்.
அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்ரம், உத்ராடம், மிருகசீரிசம், சித்திரை, அவிட்டம், விசாகம், புனர்பூசம், பூரட்டாதி, அனுசம், பூசம், உத்ரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய செயல்களை செய்ய முற்பட்டால் சாதகமான பலன்களை ஏற்படுத்தி தரும்.
கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?