'கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

By Kathiravan V
May 15, 2024

Hindustan Times
Tamil

கேதுவின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றாக மூலம் நட்சத்திரம் உள்ளது. 

குரு பகவானின் தனுசு ராசியில் உள்ளது. ஞானகாரகன் ஆன கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரம், புத்திகாரகன் ஆன குருவின் வீட்டில் உள்ளது.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு நன்மைகள் நிறைய செய்யும் பண்பு கொண்டவர்கள் ஆனால் அவர்களை அவர்கள் வீட்டில் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

தாம்பத்தியம், சிற்றின்பங்களில் ஈடுபாடு இருந்தாலும், நாளடைவில் இவர்கள் ஞானத்தேடலில் ஈடுபடுவார்கள்.

'கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

'கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

இவர்களுக்கு கோபம் சீக்கிரமாக வந்தாலும், அது வந்த வேகத்தில் தணிந்துவிடும். சமூகசேவை மீது ஆர்வம் கொண்ட இவர்களுக்கு கல்வியில் சற்று குறைந்தே இருக்கும். ஆனாலும் அவர்களின் உலக அறிவு மிக சிறந்ததாக இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொஞ்சம் ஈகோ அதிகமாக இருக்கும். சில நேரங்களின் தங்களின் கருத்தை ஆணித்தனமாக எடுத்து வைப்பார்கள். யார் எடுத்து சொல்லாலும் அதனை மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.

மேலும் இவர்களுக்கு, சுக்கிர மகா தசை, சந்திர மகா தசை, ராகு மகா தசை, சனி மகா தசை, புதன் மகா தசை ஆகிய தசைகள் அனுகூலம் தருவதாக அமைகிறது. 

மேஷம் முதல் மீனம் வரை! சூரியன் உடன் சேரும் கிரகங்களால் ஏற்படும் நன்மை தீமைகள்!