சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரம் செவ்வாய் பகவானின் மேஷ ராசியில் முழு நட்சத்திரமாக வருகிறது.
சுக்கிரனின் சுபிட்சங்களும், செவ்வாயின் வீர பராக்கரமும் இணைந்து இருப்பவர்களாக பரணி நட்சத்திரக்காரர்கள் விளங்குவார்கள்.
புத்திசாலிதனமாக நடந்து கொள்ளும் இவர்களுக்கு ஆன்மீக தொண்டுகளில் நாட்டம் அதிகமாக இருக்கும். இதற்கான கடின விரதங்களையும் மேற்கொள்வார்கள்.
வாழ்கையை மகிழ்ச்சியாக வாழ பிறந்தவர்களான பரணி நட்சத்திரக்காரர்கள், பெற்றோர்களுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள்.
எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரை இவர்களது எண்ணங்களை சிதறவிடமாட்டார்கள். பிடிவாதக்காரர்களான இவர்களுக்கு வாக்கு சாதூர்யமும், பிடிவாத குணமும் உண்டு.
மனுஷ கணம் பொருந்திய பரணி நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக விளங்குகிறது. பரணி நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு யானை உள்ளது. உரிய விருட்சம் நெல்லி மரம், உரிய பறவை காகம் உள்ளது. பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக துர்கா தேவி உள்ளார்.
பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சுக்கிர மகா தசை வருகிறது. இவர்களுக்கு சூரிய தசை, செவ்வாய் தசை, குரு மகா தசை, புதன் மகா தசை, கேது தசைகள் நற்பலன்களை கொடுக்கும்.
ஒரு நபர் பயணம் செய்வதால் மனதில் கிடைக்கும் பயன்கள் குறித்து அறிந்துகொள்வோமா?