‘புதனின் அறிவும், சந்திரனின் மதிநுட்பமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ ஆயில்யம் நட்சத்திர பொதுப்பலன்கள்!
By Kathiravan V May 25, 2024
Hindustan Times Tamil
‘புதனின் அறிவும், சந்திரனின் மதிநுட்பமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ ஆயில்யம் நட்சத்திர பொதுப்பலன்கள்!
புதன் பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றான ஆயில்யம் நட்சத்திரம் சந்திர பகவானின் கடகம் ராசியில் வருகிறது.
அறிவுக்கு காரகன் ஆன புதன் பகவானின் நட்சத்திரமாக ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது
மதிக்கு காரகன் ஆன சந்திரன் வீட்டில் இருப்பதால் இவர்கள் அறிவுத்தெளிவும், மதிநுட்பமும் கொண்டு விளங்குவார்கள்.
ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறிது சுயநலம் எப்போதும் இருக்கும். ஆயில்யம் நான்காம் பாதம் கண்டாந்திர நட்சத்திர பாதங்களில் ஒன்றாக வருவதால் வாழ்கையில் எச்சரிக்கை உடன் இருப்பது மிக அவசியம் ஆகும்.
சிக்கனமும் சேமிப்பு பண்பும் கொண்ட ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள். பலசாலிகளான இவர்களின் செயல்பாடுகளை எதிர்களும் நேசிப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருதேவன் குடி எனும் ஊரில் உள்ள கற்கடகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட நன்மைகள் கிட்டும். ஆனாலும், ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடுகள் நடத்தி வர அனுகூலங்கள் கிடைக்கும்.
ராட்சத கணம் பொருந்திய ஆயில்யம் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் ஆகும். இதன் விலங்கு ஆண் பூனை, இதன் விருட்சம் புன்னை மரம், இதன் பறவை கிச்சிளி பறவை ஆகும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்