’தவிட்டு பானையை தங்கம் ஆக்குவார்கள்!’ அவிட்டம் நட்சத்திரத்தின் பலன்கள் இதோ!

By Kathiravan V
Apr 20, 2024

Hindustan Times
Tamil

செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரமாக அவிட்டம் உள்ளது. 

மகரம் மற்றும் கும்பம் ராசிகள் சனி பகவானின் ஆட்சி பெற்ற ராசிகளாக உள்ளதால் அவிட்டம் நட்சத்திரம் முழுவதும் சனியின் வீடான ராசியில் மட்டுமே வருகிறது. 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ’தவிட்டு பானை எல்லாம் தங்கமாக இருக்கும்’ என்பவார்கள். ஜீவன ஸ்தானமான மகர ராசியில் பிறந்தவர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். உழைப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக செல்வத்தை பெற முடியும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியம் மிக்கவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களால் பசி தாங்க முடியாது. ஆனாலும் கொஞ்சமாக சாப்பிடக்கூடியவர்கள்.

கம்பீரத் தோற்றத்தை கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனாலும் கொஞ்சம் கர்வம் இவர்களிடம் இருக்கும்.

இந்த நட்சத்திரக்காரர்கள் இசைப்பிரியர்களாக இருப்பார்கள். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை, ராகு புத்திகள், சனி மகாதிசை சனி புத்திகள், கேது மகாதிசை கேது புத்திகள், சூர்ய மகாதிசை சூரிய புத்திகள், சந்திர மகாதிசை சந்திரபுத்திக்கள் அதிகமான நற்பலனை கண்டிப்பாக ஏற்படுத்தி வருவார்கள்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?