'மகா லட்சுமி பிறந்த நட்சத்திரம்!’ அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

By Kathiravan V
May 03, 2024

Hindustan Times
Tamil

சனி பகவானை அதிபதியாக கொண்ட அனுஷம் நட்சத்திரம் செவ்வாய் பகவானின் வீடான விருச்சிகம் ராசியில் உள்ள முழு நட்சத்திரமாக உள்ளது.

ஸ்ரீ மகாலட்சுமி பிறந்த நட்சத்திரக்காரர்கள், அமைதியே முழு உருவமாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் அலட்டிக்கொள்ளாமல் முடிப்பார்கள். 

தாய் தந்தை மீது மிகுந்த அன்பு கொண்ட இவர்களுக்கு, ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த ஈடுபாடுகள் இருக்கும்.

இசைக் கருவிகளை வாசிப்பது, இசை கேட்பது, மந்திரங்கள் ஓதுவதில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

நிறைய பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களான இவர்கள் சிரித்தால் கலையாக இருப்பார்கள்.

எதிர்காலத்தில் அதிக செல்வம் சேர்க்கவும், வெளிநாட்டில் வசிக்கும் அதிக வாய்ப்புகள் இவர்களுக்கு உண்டு.

புதன் தசை; புதன் புத்தி, சுக்ரதசை; சுக்ரபுத்தி, சந்திர  தசை; சந்திர புத்தி, ராகு தசை; ராகு புத்தி, குரு தசை; குரு புத்தி ஆகிய காலங்கள் அதிக நற்பலன்களை பெற்றுத்தரும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா.. ப்ரோக்கோலியைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

image credit to unsplash