மகரம் ராசிக்கு முடிவுக்கு வரும் ஏழரை சனி! அடுத்த 6 மாதத்தில் அடேங்கப்பா முன்னேற்றம்!

By Kathiravan V
Aug 04, 2024

Hindustan Times
Tamil

தேடல் மிகுந்த மகரம் ராசிக்காரர்கள் இலக்கை நோக்கி சென்று வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். மிகுந்த செல்வம் கொண்டு இருந்தாலும், அதை அடுத்தவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உபயோகிக்கும் திறன் இவர்களுக்கு உண்டு.

சனி பகவானை பொறுத்தவரை மார்ச் மாதத்தில் மீனம் ராசிக்கு இடம் பெயர்கிறார். நவம்பர் 15ஆம் தேதி வரை வக்ர கதியில் உள்ளார். இந்த நேரத்தில் சனி பகவான் புத்திக் கூர்மை, தெளிவை தருவார். உடல் நலனின் அக்கறையும், சரியான நேரத்தில் உறக்கத்தையும் சரியாக கடைப்பிடித்தால் போதும்.

இந்த நேரத்தில் சோம்பேறி தனத்தில் இருந்து மகரம் ராசிக்காரர்கள் விடுபடவேண்டும்.  செய்த வேலைக்கு பலன் இல்லமால் போன நிலை மாறும்.

உங்களது செயல்களில் சற்று திருத்தம் செய்தால் 3ஆம் இடத்தில் உள்ள ராகு பகவான் மிகப்பெரிய நன்மைகளை வழங்குவார். ராகு பகவானின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்க உள்ளார்.

மகரம் ராசிக்காரர்களுக்கு புதிய பாதை திறக்க உள்ளது. குடும்ப நிதி நிலைகள் மேம்படும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள். மார்ச் மாதத்தில் சனி பகவான் ஏழரை சனி பிடியில் இருந்து மகரம் ராசிக்காரர்களை விலக்குகிறார். ஆனாலும் இந்த நேரத்தில் சனி பகவான் சுகத்தை தருவார்.  பல்வேறு வழிகளில் இருந்து இந்த நேரத்தில் பணம் வரும். முறையாக உழைக்க தொடங்கும் போது கோடிகளில் பணம் குவிய வாய்ப்புகள் உள்ளது.

மார்ச் மாதத்தில் சனி பகவான் ஏழரை சனி பிடியில் இருந்து மகரம் ராசிக்காரர்களை விலக்குகிறார். ஆனாலும் இந்த நேரத்தில் சனி பகவான் சுகத்தை தருவார்.  பல்வேறு வழிகளில் இருந்து இந்த நேரத்தில் பணம் வரும். முறையாக உழைக்க தொடங்கும் போது கோடிகளில் பணம் குவிய வாய்ப்புகள் உள்ளது.

மகரம் ராசிக்காரர்கள் ஆணவம், அகந்தையை விட்டு ஒழித்தால் சிக்கல்கள் இருக்காது. வரும் நவம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு சனி பகவான் மிகுந்த நற்பலன்களை வழங்குவார். பயணங்கள் மூலம் புதிய வழிகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வெற்றிகளை ஏற்படுத்தி தரும் காலமாக அமையும். புதிய வாய்ப்புகள் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும்.

திருமணம் ஆன தம்பதிக்கு குழந்தை வரம் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமனம் கைக்கூடும். இணைப்புகள் மூலம் தன லாபம் ஏற்படும். சமூகத்தில் புகழ் உண்டாகும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மென்மேலும் உயரக் கூடிய நிலை உண்டாகும்.

Siddharth: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.