’மேஷம் முதல் மீனம் வரை!’ ராஜாவுக்கு ராஜா ஆக்கும் கிரக மாலிகா யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

By Kathiravan V
Jun 15, 2024

Hindustan Times
Tamil

கிரகங்கள் ஒன்றை ஒன்று கோர்த்தது போல் அமைய பெறும்போது, கிரக மாலிகா யோகம் உண்டாகிறது.

குறைந்தபட்சம், 6 முதல் 8 வீடுகளுக்கு கிரங்கள் மாலையாக அமையும்போது, ’கிரக மாலிகா’ யோகம் ஏற்படுகிறது. 6 வீடுகளுக்கும் குறைவாக கிரகங்கள் அமையும் போது ’கிரக மாலிகா’ யோகம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

9 கிரகங்களும் தனித்தனியாக அமையபெற்றால் அந்த நபர் சக்ரவர்த்தி ஆவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. மாபெரும் யோகம் கொண்டவர்களுக்குதான் இந்த அம்சம் கிடைக்கும்.

இந்த யோகம் மூலம் ஒன்றை ஒன்று கிரங்கள் இடையூறு செய்யாமல், அதன் இயல்பில் அதன் வேலையை செய்யும் நிலை ஏற்படும். இதனால் அந்த கிரகங்கள் தரும் பலன்கள் பாதிப்புகள் ஏதுமின்றி முழுமையாக கிடைக்கும்.

லக்னம் முதல் அடுத்த 9 வீடுகளில் தொடர்ச்சியாக அனைத்து கிரகங்களும் அடங்கி இருந்தால், இதனை ’நவரத்ன மாலிகா யோகம்’  உண்டாகிறது. இதனை ‘லக்ன மாலிகா யோகம்’ என்றும் குறிக்கப்படுகின்றது. இந்த யோகம் பெற்ற ஜாதகர், அரசனுக்கெல்லாம் அரசனாக விளங்குவார் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது. 

உங்கள் லக்னத்தின் இரண்டாம் வீட்டில் இருந்து அடுத்து உள்ள 9 வீடுகளுக்கு கிரக மாலிகா யோகம் ஏற்பட்டால், தன மாலிகா யோகம் என இது குறிக்கப்படுகின்றது. இதில் ஜாதகருக்கு குடும்பம் என்ற அமைப்பு ஏற்பட்ட பின்னர், பொருளாதாரத்தில் மிகப்பெரும் வெற்றிகளை குவிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். 

’மேஷம் முதல் மீனம் வரை!’ ராஜாவுக்கு ராஜா ஆக்கும் கிரக மாலிகா யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் இருந்து கிரகங்கள் தொடர்ச்சியாக இருந்தால், தைரிய மாலிகா யோகம் உண்டாகிறது. துணிச்சல் மிக்க செயல்களில் ஜாதகர் ஈடுபட்டு வாழ்கையில் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகர் பெறுவார்.

சமையலுக்கு பயன்படுத்த கூடாத எண்ணெய்கள் இதோ! 

pixa bay