சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க புளியை வைத்து தயார் செய்யக்கூடிய சில உணவுகளால் உடலுக்கு குளிர்ச்சியை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Apr 26, 2024
Hindustan Times Tamil
புளியில் இருக்கும் ப்ளிதோரா பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஆதாராமாக இருந்து வருகிறது. கோடை காலத்தில் சிறந்த உணவாக இவை இருக்கிறது
புளியை வைத்து சட்னி, ஜூஸ், சாதம் போன்ற பல வகை உணவுகளை தயார் செய்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்
கோடை கால மாலை நேர புத்துணர்ச்சி பானமாக புளி ஜூஸ் இருந்து வருகிறது. புளியை கூழாக்கி அதை தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டிய பின் தேன் அல்லது சர்க்கரை கலந்து கூடவே ஐஸ் க்யூப்களும் சேர்த்து பருகலாம். இந்த பானம் உடலுக்கு மனதுக்கும் புத்துணர்ச்சியை தரும்
புளியை வைத்து சட்னி தயார் செய்து மாலை நேர ஸ்நாக்ஸ்களாக இருந்து வரும் சமோசா, பக்கோடா, வடை போன்றவற்றுடன் சாப்பிடலாம்
பரவலான மிக்ஸிங் சாதமாக இருந்து வரும் புளி சாதம் சாப்பிடலாம். புளி கூழ், கருவேப்பிலை, கடுகு, மஞ்சள், கடலை பருப்பு ஆகியவற்றை எண்ணொய்யுடன் வதக்கி அந்த கலவை சோறுடன் மிக்ஸ் செய்து சாப்பிடலாம். தொடுகறியாக ஏதேனும் காய்கறி அல்லது தயிர் வைத்துக்கொள்ளலாம்
உடற்பயிற்சி செய்த பின்னர் பருககூடிய சிறந்த பானங்களில் ஒன்றாக புளி ஸ்மூத்தி உள்ளது. மாம்பழம், புளி, வாழைப்பழம், தயிர் ஆகியவற்றை சேர்த்து இந்த ஸ்மூத்தி தயார் செய்து பருகலாம்
தக்காளி, வெங்காயம், மிளகாய், புளி கூழ் போன்றவற்றை சேர்த்து புளியோதரை தொக்கு தயார் செய்யலாம். அனைத்து விதமான உணவுகளுக்கும், ப்ரை ஸ்நாக்ஸ்களுக்கும் சிறந்த தொடுகறியாக இது இருக்கும்