பிரசாந்திற்கு ஜீன்ஸ் படம் கிடைத்த கதையை பாலாஜி பிரபு பேசி இருக்கிறார்.
By Kalyani Pandiyan S Dec 28, 2024
Hindustan Times Tamil
‘விஷ்ணு படத்திற்கு பிறகு விஜயை வைத்து நாங்கள் ஒரு படம் எடுப்பதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் அது தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேராக எஸ்.ஏ சந்திரசேகரிடம் நானும் எங்கள் அப்பாவும் சென்று, விஜயின் தேதி எங்களுக்கு மிகவும் தூரமாக கிடைக்கிறது என்றோம்.
உடனே அவர் விஜய் மாதிரியே தற்போது ஒரு பையன் வளர்ந்து வருகிறான். அவன் பெயர் அஜித்;
நாங்கள் அஜித்தை தொடர்பு கொண்டு படம் எடுக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்பொழுது அவர் படத்திற்கு சம்பளமாக 10 லட்சம் கேட்டார். அவர் கேட்ட சம்பளம் எங்களுக்கு மிகவும் அதிகமாக தெரிந்தது.
மார்க்கெட் சரிந்து இருந்த பிரசாந்தை நாங்கள் முயற்சி செய்தோம். பிரசாந்த் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். சம்பளமும் பேசப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் படத்திற்கான பூஜையில் பிரசாந்த் கலந்துகொள்ளவில்லை. இது அப்பாவுக்கு கடும் கோபத்தை உருவாக்கிவிட்டது. இருப்பினும், அன்றைய நாள் பூஜையை நடத்தினார்.
2 நாட்கள் கழித்து பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும் வீட்டிற்கு வந்தார்கள். வந்தவர்கள் பிரசாந்துக்கு ஜீன்ஸ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரசாந்தின் கால்ஷீட்டை கிட்டதட்ட 3 வருடங்கள் ஷங்கர் கேட்டிருக்கிறார். அந்த மூன்று வருடங்களிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.
அதனால் நம்முடைய படத்தை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, இந்த படத்தில் பிரசாந்த் நடிப்பதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார் . அப்பா அதற்கு ஒத்துக்கொண்டு ஒப்பந்தத்தை கேன்சல் செய்தார்’ என்று பேசினார்