பாக்யராஜ்: ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்சியமான சம்பவத்தை அண்மையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பேசினார்.  ( Photo credit: film History Pics)

By Kalyani Pandiyan S
Mar 07, 2025

Hindustan Times
Tamil

'16 வயதினிலே’ திரைப்படத்தில் கமலுக்கும் ரஜினிக்கும் இடையே ஒரு விவாதம் நடக்கும். அந்தக்காட்சியை படப்பிடிப்பில் எடுக்கும் பொழுது, காட்சியில் நடக்கக்கூடிய வசனங்களை கமலிடம் கொண்டு கொடுத்தேன். (Photo credit:   Bhagyaraj Krishnaswamy instagram)

அதை பார்த்த கமல், பரட்டை (ரஜினி) இவ்வளவு வசனங்களை பேசுகிறான்; அவனுக்கு பதில் கொடுக்கும் சப்பானி, ஒரே ஒரு வசனத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பேசுகிறானே என்றார். அந்த வசனம்தான், ‘சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு குடு’.(Photo credit:   Bhagyaraj Krishnaswamy instagram)

உடனே நான், சார் அதை வெவ்வேறு மாடுலேஷனில் பேசுங்கள் என்று கூறினேன். உடனே அவர், இல்லை இல்லை அதற்குள் உங்களுக்கென்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகவில்லை என்றால், உங்கள் டைரக்டர் (பாரதிராஜா) காட்சியை ஓகே செய்யமாட்டார் என்றார். 

இதையடுத்து நான், சப்பானி ஒரு அப்பாவியான கேரக்டர். அவன் முதலில் அந்த வசனத்தை சொல்லும்பொழுது சாதாரணமாக சொல்வான். இரண்டாம் முறை சொல்லும் பொழுது, அவன் ஒரு குழந்தை போல மாறுவான். (Photo credit: Bhagyaraj Krishnaswamy Facebook )

மூன்றாவது முறையில் அந்த குழந்தைத்தனம் அவனது கேரக்டரின் உச்சமாக மாறும். இது காட்சியில் பிரதிபலிக்க வேண்டும் என்று கூறினேன்.  உடனே அதை கனகச்சிதமாக புரிந்து கொண்ட கமல் அப்படியே நடத்தி அசத்தினார்.' என்று பேசினார். (Photo credit: Bhagyaraj Krishnaswamy facebook)

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash