உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசினில் ஒரு பாயாசம்.. ஈசியா செய்யலாம் பாருங்க!

Pixabay

By Pandeeswari Gurusamy
Mar 13, 2025

Hindustan Times
Tamil

பாதாம் மரத்தில் இருந்து வடியும் கோந்து உடலுக்கு குளிர்ச்சி தரும் என கூறப்படுகிறது. இது பாதாம் பிசின் என கடைகளில் கிடைக்கிறது. இது தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது.

Pixabay

பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது. இதை வைத்து ருசியான பாயாசம் எப்படி செய்வது பார்க்கலாம்

Pixabay

தேவையான பொருட்கள் : பாதாம் பிசின் - 5 துண்டு, முந்திரி – ஒரு கைப்பிடி,  பிஸ்தா – ஒரு கைப்பிடி, பாதாம் – ஒரு கைப்பிடி, துருவிய தேங்காய் – ஒரு கப், நாட்டுச்சர்க்கரை – ஒரு ஸ்பூன், மாதுளை முத்துக்கள் – 2 ஸ்பூன், துருவிய நட்ஸ் – 2 ஸ்பூன்

Pixabay

பாதாம் பிசினை ஓரிரவு ஊறவைக்க வேண்டும். முந்திரி, பாதாம், பிஸ்தா என அனைத்தையும் தனியாக ஓரிவு ஊறவைக்க வேண்டும்

Pixabay

ஊறவைத்த நட்ஸ்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், வாழைப்பழம் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

Pixabay

இதனுடன் ஒரு கப் தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தப்பாலில், அரைத்த நட்ஸ் பேஸ்ட்டை கலந்துவிடவேண்டும். பின்னர் பாதாம் பிசின், நட்ஸ் துருவல் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்க்க வேண்டும்.

Pixabay

மேலும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்கினால் சுவையான பாதாம் பிசின் பாயாசம் தயார். விருப்பம் உள்ளவர்கள் தேன் சேர்த்தும் ருசிக்கலாம்.

Pixabay

தோசை, இட்லி எல்லா நேரமும் சாப்பிட்டு சோர்வடைந்துவிட்டீர்களா? உங்களிடம் தோசை மாவு மீதமிருந்தால், இப்போது நீங்கள் ஒரு சுவையான மற்றும் சத்தான சிற்றுண்டியைச் செய்யலாம்.