‘அயோத்தி ராமர் கோயில் தெரியும்! மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் தெரியுமா?’ இத்தனை சிறப்புகளா?

By Kathiravan V
Jan 22, 2024

Hindustan Times
Tamil

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலின் சிறப்புகளை தற்போது பார்க்கலாம்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்ப்பட்ட ராமர் கோயிலில் இன்று பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூன்று அடுக்குகளைக் கொண்ட சன்னதியாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலானது ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது.

பாரம்பரிய கட்டட கலை பாணியான நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் அழகிய வேலைப்படுகளுடன் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்,  ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோயில், வடுவூர் கோதண்ட ராமர் கோயில், கும்பகோணம் - பட்டாபிஷேக ராமர் கோயில், திருப்புல்லாணி - தர்பசயன ராமர் கோயில் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. 

குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டம் மதுரந்தகத்தில் அமைந்துள்ள ஏரிகாத்த ராமர் கோயில் சிறப்பு வாய்ந்தது.

இராவணன் பிடியில் இருந்த சீதையை மீட்பதற்காக இலங்கையை நோக்கி சென்ற ராமர் மதுராந்தகத்தில் இருந்த விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கி இருந்ததாக ஐதீகம். முனிவரின் வேண்டுகோளின்படி போரில் வெற்றி பெற்று அயோத்தி திரும்பி ராமர், சீதை உடன் திருமண கோலத்தில் காட்சி அளித்தார். 

ஆங்கிலேயர் காலத்தில் பெரு மழை பெய்ததால் நிரம்பிய மதுராந்தகம் ஏரி உடைந்து ஊரே அழியக்கூடிய நிலை இருந்ததாகவும், ஊரை வெல்லச் சேதத்திலிருந்து காக்குமாறு ஸ்ரீ ராமபிரானிடம் பக்தர்கள் வேண்டிய நிலையில் ஏரி உடையாமல் பாதுகாப்பான நிலைக்கு சென்றதால் ஏரி காத்த ராமர் என்ற பெயர் இக்கோயிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

சர்வதேச பனிக்கரடி தினம் இன்று