என்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசும் நபர்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் எது செய்தாலும் அது பேசுபொருளாகும். மக்கள் சினிமாவைப் பற்றியும், நடிகர்கள் பற்றியும் பேசுவதற்கு மிகவும் விரும்புகிறார்கள்.

By Kalyani Pandiyan S
Oct 25, 2024

Hindustan Times
Tamil

ஆகவே, அவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை. ஒவ்வொருவரிடம் சென்று நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக இருங்கள் என்று என்னால் கூற முடியாது.

 புரிதல் கொண்ட சில பேர் அதனைச் செய்வதில்லை. ஆனால் சிலர் பிரச்சினையின் ஆழம் தெரியாமல், என்னுடைய பர்சனல் விஷயங்களை பேசுகிறார்கள். 

என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த பிறகு, மற்றவர்கள் சொல்வதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று பேசினார்.

முன்னதாக, ஆர்த்தி ஜெயம் ரவியை மரியாதையாக நடத்தவில்லை என்றும் தனிப்பட்ட வங்கிப்பரிவர்த்தனைக்கு கூட ரவியை அனுமதிக்காத அவர் சின்ன சின்ன செலவுகளுக்கு கூட, அவரை கையேந்த வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும், ரவியின் மாமியார் ரவி நடித்த சில திரைப்படங்களை தயாரித்த நிலையில், அந்தப்படங்கள் பெரிதான வெற்றியைப் பெறவில்லை. இதனைக்கொண்டும் ரவி அவமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், ரவியின் மீது சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்த ஆர்த்தி ரவி அவரின் வாட்ஸ் அப்பில் ஒரு மெசெஜ் வந்தால் கூட, அது குறித்து கேட்டு துன்புறுத்தியதாகவும், அதனால் ரவி வாட்ஸ் பயன்படுத்துவதையே விட்டுவிட்டார் என்றும் கோலிவுட்டில் பேசப்பட்டது.  - ஜெயம் ரவி பேட்டி!

தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?