சமையலுக்கு பயன்படுத்த கூடாத எண்ணெய்கள் இதோ! 

pixa bay

By Pandeeswari Gurusamy
Jul 17, 2024

Hindustan Times
Tamil

பெரும்பாலும் சமையலில் இருந்து பிரிக்க முடியாது எண்ணெய். சமையலின் ருசிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுடன், அதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயும் முக்கியமானது. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திலும் அதன் சுவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

pixa bay

முன்பைப் போல் இல்லாமல் இப்போது பல வகையான எண்ணெய் வகைகள்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் உடல் நலத்துக்கு நல்லது என்ற பிரச்சாரமும் உள்ளது. எனவே சில எண்ணெய்களை முயற்சிப்போம்.

pixa bay

ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. இந்த சமையல் எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவதால் உடல் பருமன், இதயம் தொடர்பான நோய்கள், மூட்டு வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். செரிமான பிரச்சனைகளிலும் எண்ணெய்க்கு முக்கிய பங்கு உள்ளது. ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் அத்தகைய 5 சமையல் எண்ணெய்கள் என்னவென்று இப்போது பார்ப்போம்.

pixa bay

பாமாயிலில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம். இதில் 50 சதவீதம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இந்த நிறைவுற்ற கொழுப்பு "கெட்ட" கொலஸ்ட்ரால் எனப்படும் எல்டிஎல் கொழுப்பின் அளவை உயர்த்துகிறது. அதிக எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு காரணமாக, தமனிகளில் அடைப்புகள் உருவாகத் தொடங்குகின்றன. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

pixa bay

தற்போது சோயாபீன் எண்ணெய் சந்தையில் அதிகம் கிடைக்கிறது. சோயாபீன் எண்ணெயில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இந்த எண்ணெய்களை அதிக அளவு உட்கொள்வது மூட்டு வலி மற்றும் வீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

pixa bay

நீங்கள் சமையலுக்கு தாவர எண்ணெயைப் பயன்படுத்தினால், சோளம், சூரியகாந்தி மற்றும் சோயாபீன் ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் அதிக அளவு ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த எண்ணெயை அதிகமாக உட்கொள்வதால் இதயத்தில் அடைப்பு ஏற்படும்.

pixa bay

பருத்தி விதை எண்ணெயில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவற்றை அதிகமாக உட்கொள்வது வீக்கம், ஒவ்வாமை, தோல் வெடிப்பு, அரிப்பு, கண் எரிச்சல் அல்லது சுவாசக் கஷ்டம் போன்ற பிற உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி, உணவில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவு பொருட்களை நாம் குறைத்து கொள்வதும் கூடுமானவரை வேக வைத்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் நல்லது.

pixa bay

ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பிரபலப்படுத்தப்படுகிறது. ஆலிவ் எண்ணெயை டிரஸ்ஸிங் அல்லது டிப்ஸ் செய்ய பயன்படுத்தலாம். சாலடுகள், சட்னிகள், பாஸ்தா, பீட்சா, பாஸ்தா போன்றவற்றில் நேரடியாகப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த எண்ணெய் அதிக வெப்பத்தில் சமைக்க ஏற்றதல்ல. அதிக தீயில் சமைப்பதால் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் மட்டுமின்றி சருமத்தில் பருக்கள் மற்றும் சிவப்பு நிற வெடிப்புகளும் ஏற்படும். ஆலிவ் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.

pixa bay

சூப்பரான ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஹார்வர்ட் பல்கலை வழங்கும் டிப்ஸ் இதோ!

Pixabay