வாயில் வைத்ததும் வழுக்கிக் கொண்டு செல்லும் அவல் அல்வா எப்படி செய்யலாம் பாருங்க!

Canva

By Pandeeswari Gurusamy
Mar 14, 2025

Hindustan Times
Tamil

தேவையான பொருட்கள்: பொரி-2 கப், வெல்லம் - 3/4 கப், ஏலக்காய் தூள் சிறிதளவு, முந்திரிபருப்பு - 10, உப்பு - ஒரு பிஞ்ச், புட்கலர் - சிறிதளவு

Canva

இரண்டு கப் பொரியை கால் மணிநேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். இரண்டு கப் பொரிக்கு முக்கால் கப் அளவு வெல்லத்தை எடுத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.

Canva

ஏற்கனவே ஊற வைத்த பொரியை நன்றாக பிழிந்து மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொள்ள வேண்டும். இப்போது கரைத்து வைத்திருந்த வெல்லம் தண்ணீரை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். பொரியை வெல்ல தண்ணீருடன் சேரத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

Canva

இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் 4 ஸ்பூன் நெய் விட்டு கொள்ள வேண்டும். அதில் உங்கள் விருப்பம் போல் முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும். குறைந்தது 10 முந்திரியை உடைத்து சேர்க்கலாம்.

Canva

முந்திரி வறுத்த பின் அதே கடாயில் அரைத்து வைத்த பொரி வெல்ல கலவையை சேர்த்து கலந்து விட வேண்டும். அதில் இரண்டு பிஞ்ச் அளவு ஏலக்காய் தூளை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இரண்டு பிஞ்ச் புட் கலரையும் சேர்த்து கலந்து விட வேண்டும். 

Canva

தொடர்ந்து நன்றாக கலந்து விடும் போது அந்த பொருட்கள் கெட்டியாக ஆரம்பிக்கும். ஆனால் தொடர்ந்து கை விடாமல் கலந்து விட வேண்டும். இதில் இடை இடையே இரண்டு முதல் 3 ஸ்பூன் நெய்யை சேர்த்து கொள்ளலாம். 

Canva

அதில் வறுத்த முந்திரியையும் சேர்த்து தொடர்ச்சியாக கலந்த பின் பொரி அல்வா நெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடலாம். இந்த பொரி அல்வாவை ஒரே ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். பின்னர் அடிக்கடி செய்து தர சொல்வி கேட்பார்கள்.

Canva

உங்கள் வீட்டில் நமத்து போன பொரி இருந்தால் கூட இந்த அல்வாவை செய்து பாருங்கள் ருசி அட்டகாசமாக இருக்கும். வாயில் வைத்த உடனே வழுக்கி கொண்டு செல்லும். 

Canva

தக்காளி நம் சரும பளபளப்பிற்கு எப்படி உதவும் என்று பாருங்க!

Pixabay