Benefits of Pumpkin Seeds: ஆண்களுக்களின் விந்தணு தரத்தை அதிகரிக்க உதவும பூசணி விதைகள்
Pexels
By Pandeeswari Gurusamy Apr 04, 2024
Hindustan Times Tamil
பூசணி விதைகளில் காணப்படும் ஸிங்க் ஆண்களுக்கு பல வகைகளில் நன்மை சேர்க்கின்றன. குறைவான விந்து தரம் மற்றும் ஆண்களில் மலட்டுத்தன்மை கூட ஸிங்க் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். தினசரி உணவில் இந்த விதைகளைச் சேர்ப்பது ஒட்டுமொத்த விந்தணு தரத்தை மேம்படுத்த உதவும்”
pixa bay
ஆண்களின் ஆண்மையை பெருக்க பாதாம், பிஸ்தா, முந்திரி, அத்தி பழம், அக்ரூட் உள்ளிட்ட உலர் பழங்களை பலரும் அதிகம் உட்கொண்டு வருகின்றனர். அதிக புரதச்சத்தை கொண்டுள்ள இந்தவகை உலர் பழங்கள் உடலுக்கு பலத்தையும், போஷாக்குகளையும் அளிக்கிறது. முட்டையின் வெள்ளைக்கரு, நாட்டு கோழி, மீன்கள் உள்ளிட்ட அதிக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். இந்த வரிசையில் தவிர்க்க முடியாத பொருளாக பூசணி விதைகள் உள்ளது.
pixa bay
பூசணி விதைகள் பல ஆரோக்கிய நன்மை பயக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. இந்திய ஜர்னல் ஆஃப் யூரோலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பூசணி விதை உட்கொள்வது புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும்,க் ஆண் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pexels
நல்ல தூக்கத்தை அளிக்க வல்ல உணவுகளில் பூசணி விதை முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதையில் உள்ள சத்துக்கள் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
Pexels
பூசணி விதைகளில் மக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த தாது இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதால் சர்க்கரை நோய் பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டது.
Pexels
புற்றுநோய் இன்று உலகம் முழுவதும் பலரைக் கொன்று வருகிறது. பூசணி விதையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Pexels
பூசணி விதைகள் துத்தநாக உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால், இது இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலியல் செயல்பாட்டை பராமரிக்க போதுமான துத்தநாக அளவுகள் முக்கியம் என ஆய்வுகள் கூறுகின்றன.
Pexels
ஆண்களின் ஆண்மைக்குறைவை நிவர்த்தி செய்வதற்கு, வாழ்க்கை முறை மாற்றங்கள், சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சில சந்தர்ப்பங்களில் மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது.
pixa bay
ஆண்களின் ஆண்மைக்குறைவு தொடர்பான பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தால், சரியான நோயறிதல் மற்றும் உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமான சிகிச்சை பரிந்துரைகளுக்கு ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது.