இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே செல்வந்தர் யோகம் கொண்டவர்களாம் 

Canva

By Suriyakumar Jayabalan
May 07, 2025

Hindustan Times
Tamil

கிரகங்கள் நகர்வுகள் மட்டுமில்லாமல் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம், மாதம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மனிதனாக பிறந்த அனைவருக்கும் தான் விரும்பியபடி வாழ வேண்டுமென்ற எண்ணம் கட்டாயம் இருக்கும். 

Canva

ஆடம்பரமான வாழ்க்கையில் அனைத்து மனிதர்களும் விரும்புவார்கள் ஆனால் அதற்கு கடின உழைப்பு மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் துணை நிற்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் பிறந்த மாதம் அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Canva

அந்த வகையில் குறிப்பிட்டு சில மாதங்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டத்தோடு பிறந்திருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே நிலைத்தன்மை மற்றும் ஆடம்பரத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. கடின உழைப்பு மற்றும் மன உறுதி உள்ளிட்டவைகளின் மூலம் செல்வத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள் என கூறப்படுகிறது.

Canva

மே மாதத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர் மற்றும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஒழுக்கத்திற்கு இவர்கள் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட்டு விடாமுயற்சியுடன் அதற்காக உழைக்க எப்போதும் தயாராக இருப்பார்கள் என கூறப்படுகிறது. 

Canva

 ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை நிர்வகிக்கும் திறனை கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. தங்கள் செலவுகள் மற்றும் முதலீடுகளில் அதிகம் கவனமாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. திட்டமிட்டு தங்கள் பொருளாதாரத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள் என கூறப்படுகிறது. நீண்டகால வெற்றுக்காக கடின உழைப்பை கொடுப்பார்கள் என கூறப்படுகிறது. 

Canva

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் புதுமை மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள் என கூறப்படுகிறது. வெற்றிக்கான வழிகளை எளிதில் அடையாளம் காணக்கூடிய திறமை கொண்டவர்கள் என கூறப்படுகிறது. நிதி இலக்குகளை அடைவதற்கு இவர்கள் எந்த நிலைமைக்கும் செல்வார்கள் என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன