Astro Tips: மருதாணி வைப்பதற்கு எது நல்ல நேரம் தெரியுமா!
By Pandeeswari Gurusamy Jun 15, 2024
Hindustan Times Tamil
மருதாணி மரம் வீட்டில் சரியான திசையில் வளர்ப்பது ஆன்மீக ரீதியாகவும் சிறப்பு மிக்கது. மருதாணியை செடியில் இருந்து பறிப்பதற்கும், கையில் வைப்பதற்கும் சில விதிகள் உள்ளன. அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ளவதில் மருதாணிக்கு தனிஇடம் தருவார்கள். இன்று திருமணம் போன்ற எந்த விசேஷ விழாக்களிலும் முதல் நாள் பெண்களின் கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசி அலங்கரிப்பது தான் முக்கிய வேலையாக இருக்கும்.
இன்று நாகரிக வளர்ச்சியின் காரணமாக மெஹந்தி விழாவாக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருதாணி யால் அலங்கரித்து கொண்டாடுகின்றனர். இருந்தாலும் மருதாணி வைப்பதற்கும் நல்ல நேரம் காலம் உண்டு என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அதுதான் உண்மை
Pexels
அன்று உறவினர்களும் நண்பர்களுமாக தங்களுக்குள் மருதாணி வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. இப்போது மெஹந்தி போடுவதற்காக பல டிசைனர்கள் இருக்கிறார்கள். இது மிகப்பெரிய சந்தையாக மாறி உள்ளது.
pixa bay
மருதாணி இலையை அரைத்து தலையில் பூசூம் போது தலையில் உள்ள நரை முடி கருமை நிறத்தில் மாற ஆரம்பிக்கும். இது இயற்கையான ஹேர்டை ஆக பலரும் பயன்படுத்துகின்றனர்.
pixa bay
மருதாணி முற்றிய இலையை விட இளம் கொழுந்தாக உள்ள இலைகளை அரைத்து பூசும் போது நன்றாக சிவக்கும்.
pixa bay
மருதாணி இலையில் உள்ள குச்சிகள் மற்றும் பழுத்த இலைகளை நீக்கிவிட்டு அம்மியில் அரைத்த பெண்கள் இன்று மிக்ஸியில் அரைத்து போட ஆரம்பித்து விட்டனர். உடலுக்கு குளிர்ச்சி, நகங்களுக்கு ஆரோக்கியம் தருகிறது.
pixa bay
மருதாணி இலையை அரைக்கும் போது ஓரிரு கொட்டாம்பாக்கு அல்லது சிறிதளவு அரை எலுமிச்சை சாறு அல்லது ஐந்தாறு கிராம்புகள் என்று ஏதாவது ஒன்றை மட்டும் சேர்த்து அரைத்து பூசினால் நிறம் நன்றாக பிடித்துக் கொள்ளும்.
pixa bay
மருதாணி மரம் வீட்டில் சரியான திசையில் வளர்ப்பது வாஸ்து சாஸ்திர படியும் ஆன்மீக ரீதியாகவும் சிறப்பு மிக்கது. இத்தனை சிறப்பு வாய்ந்த மருதாணியை செடியில் இருந்து பறிப்பதற்கும், கையில் வைப்பதற்கும் சில வழிகள் உள்ளன. மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு மருதாணியை பறிக்க கூடாது.
pixa bay
வியாழன், வெள்ளி, ஞாயிறு மருதாணி வைக்க சிறந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி திதிகளில் மருதாணி வைப்பது விஷேசம். பரணி, பூடாரம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் மருதாணி வைக்க உகந்த நட்சத்திரகள் ஆகும்.
pixa bay
ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் மருதாணி வைக்க கூடாது. சந்திராஷ்டம காலங்களிலும் மருதாணி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
pixa bay
Radish : யார் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தெரியுமா!