சனி கோடி கோடியா கொட்டணுமா.. தோஷங்கள் நீங்க இந்த சின்ன பரிகாரத்தை ட்ரை பண்ணுங்க!

Canva

By Pandeeswari Gurusamy
Apr 17, 2025

Hindustan Times
Tamil

சனி கிரகத்தால் உங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளா... எளிய பரிகாரங்கள் செய்து பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

Canva

ஏழரைச்சனி, சனி திசை, சனி பார்வை, சனி புக்தி என்று உங்களுக்கு எப்போதும் சனியால் பாதிப்பு இருக்கிறதா.‌ உங்களுக்கு மிகவும் எளிமையான பரிகாரங்களை சரவணா தேவி அவர்கள் நற்பவி தேவி என்ற யூடியூப் சேனலில் சொல்லி இருக்கிறார்.

Pixabay

தினந்தோறும் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் வேப்ப மரத்துக்கு தண்ணீர் ஊற்றி வர சனியால் ஏற்படும் பாதிப்பு குறையுமாம்.

Pixabay

தினமும் தண்ணீர் ஊற்ற முடியாவிட்டாலும் கூட சனிக்கிழமை தோறும் காலை சிறிது எள்ளும் வெல்லமும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வேப்ப மரத்தின் அடியில் வைக்க வேண்டும். வெல்லம் சேர்க்காமலும் வைக்கலாம்.

Pixabay

வேப்ப மரத்தின் கீழ் வைக்கப்பட்ட எள் உருண்டையை எறும்புகள் சாப்பிடுவதோடு தங்கள் எதிர்கால உணவு தேவைக்காகவும் சேகரித்தும் வைத்திருக்கும். இந்த மாதிரி எறும்புகளை காப்பாற்ற உதவும் போது சனியின் தாக்கம் வெகுவாக குறையுமாம்.

Pixabay

சனிக்கிழமை தோறும் கோயில்களுக்கு சென்று நவக்கிரக அமைப்பில் ஒருவராக வீற்றிருக்கும் சனி பகவானுக்கு தீபமேற்றி வழிபாடு செய்யலாம்.

Pixabay

அந்த வழிபாடு செய்ய கிளம்பும் போது அவருடைய வீட்டிலேயே அவரின் வயதின் எண்ணிக்கை அடிப்படையில் எள்ளுருண்டை களை தயார் செய்து கொண்டு செல்ல வேண்டும். எள்ளுடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து செய்யலாம்.

Canva

உதாரணமாக சனி பகவான் பாதிப்பு உள்ள நபருக்கு முப்பது வயது என்றால் அவர் முப்பது எள் உருண்டைகளாக உருட்டி எடுத்து செல்ல வேண்டும்.

Canva

தீபமேற்றி வழிபாடு செய்து விட்டு கோயிலுக்கு வெளியே வந்து எள் உருண்டைகளை அங்குள்ள மக்களுக்கு தானமாக வழங்கி விட வேண்டும்.

Canva

இந்த எளிய பரிகாரங்களை நம்பிக்கை வைத்து செய்து வரும் போது சனியால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று சரவணா தேவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Canva

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!