ஒவ்வொரு கிரகமும் அதன் ராசியை அவ்வப்போது மாற்றுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டில், கும்பத்தில் புதன் கிரகம் உதிக்கப் போகிறது.
கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக சிலரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும்
அந்தவகையில், புதன் பகவான் வரும் பிப்ரவரி 11, 2025 அன்று மதியம் 12:58 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைவார். இதற்குப் பிறகு மகா கலாநிதி யோகம் உருவாகும். இந்த யோகத்தின் காரணமாக அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் பற்றி பார்ப்போம்.
மேஷம்: கலாநிதி யோகத்தால் மேஷம் ராசிக்காரர்களின் வருமானம் உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. திடீர் நிதி ஆதாயங்களையும் நீங்கள் பெறலாம்.
ரிஷபம்: ஜோதிடத்தின் படி, இந்த நேரத்தில் வேலையில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வணிகர்களும் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் செய்ய இது சிறந்த நேரம்.