உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?
By Priyadarshini R Dec 14, 2024
Hindustan Times Tamil
கடந்த காலத்தில் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள முயலும்போது, நீங்கள் அதை மறுத்திருக்கலாம் அல்லது தடுத்திருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலும் அவர்கள் உங்களிடம் பகிர்வதை நிறுத்தியிருப்பார்கள்.
குழந்தைகளிடம் தவறுகளுக்கு தண்டனைகள் கிடைக்குமோ என்ற அச்சம் எப்போதும் நிலவும். எனவே அவர்களிடம் நேர்மைதான் முக்கியம் என்பதை ஆணித்தரமாகக் கூறுங்கள். நீங்கள் தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்துங்கள்.
குழந்தைகளுக்கு எதையும் தெளிவாகக் கூற முடியாது. அவர்களின் எண்ணங்களை அவர்கள் வெளிப்படுத்தும்போது, அவர்கள் திறந்த கேள்விகளைக் மட்டுமே கேட்க உற்சாகப்படுத்துங்கள்.
வளரிளம் பருவத்தில் சுதந்திரம் மிகவும் அவசியம். அவர்கள் உணர்வு ரீதியானவர்களாக இருப்பார்கள். அவர்கள் வளர்வதற்கு இடம்கொடுங்கள். அதேநேரத்தில் அவர்கள் திறந்த உரையாடலை நடத்தவும் வலியுறுத்துங்கள்.
குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்துவதில் குழப்பம் ஏற்படும். இது அவர்களுக்கு அவர்களின் உணர்வு ரீதியான சொல்வளத்தை அதிகரிப்பதில் இருந்து நீங்கள் எளிதில் கடந்துவிட முடியும். உணர்வு மேலாண்மையை அவர்களுக்கு எப்படி செய்துகொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.
உங்கள் குழந்தைகளுடன் உங்களுக்கு பலவீனமான பிணைப்பு இருந்தால், அதுவும் உங்களிடம் அவர்கள் மனம் விட்டு பேசுவதற்கு ஒரு தடையாக இருக்கும். இந்த பிணைப்பை நீங்கள் அவர்களுடன் தரமான நேரம் செலவிடுவதன் மூலம் மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் சில தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து உரையாடும்போது சங்கடமாக உணரலாம். உடல் மாற்றம் அல்லது உறவுகள் என்று அது இருக்கலாம். எனவே குறிப்பிட்ட சென்சிட்டிவான டாபிக்குகளில் பேசும்போது, அதை நீங்கள் பொதுவானதாக்குங்கள்.