உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவரா நீங்கள்.. இந்த உணவுகளை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
pixa bay
By Pandeeswari Gurusamy Jan 29, 2024
Hindustan Times Tamil
பட்டை, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இது கொழுப்பில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பட்டையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலில் கொழுப்பை முறையாக பராமரிக்க உதவும்.
pixa bay
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் கொழுப்பு உறிஞ்சும் தன்மையை குறைக்கிறது. வெந்தயத்தை வழக்கமாக எடுத்துக்கொண்டால் அது கொழுப்பை குறைக்க உதவுகிறது. அதை விதைகளாகவோ அல்லது கீரைகளாவோ எதுவாக வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
pixa bay
மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சிக்கு எதிரான மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. கொழுப்பையும் குறைக்கிறது.
pixa bay
பூண்டு, அதன் கொழுப்பை குறைக்கும் தன்மைகளுக்காக அதிகம் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இது கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பூண்டில் உள்ள அலிசின் என்ற உட்பொருளுக்கு கொழுப்பை குறைக்கக்கூடிய தன்மை உள்ளதாக நம்பப்படுகிறது.
pixa bay
இஞ்சியில் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளன. இதுகுறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.
pixa bay
மல்லித்தழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் உணவில் மல்லித்தழையை வழக்கமாக சேர்த்துக்கொண்டால், அது உணவுக்கு சுவையை வழங்குவதுடன், ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. மல்லித்தழை மற்றும் விதை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
pixa bay
துளசி, கொழுப்பை குறைக்கக்கூடிய தன்மை கொண்டது. இதுகுறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சிக்கு எதிரான தன்மை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
pixa bay
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் உள்ள உட்பொருட்கள் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துவதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
pixa bay
ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது பொதுவாக இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இனிப்பு மற்றும் காரம் இரண்டு உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
pixa bay
தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!