குளித்தவுடன் தண்ணீர் குடிக்க போறீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 27, 2024

Hindustan Times
Tamil

குளித்தவுடன் தண்ணீர் பருகலாமா அல்லது கூடாதா என்றும், பருகினால் உடலில் என்ன நடக்கும் என்றும் இங்கு விளக்கப்பட்டுள்ளது. 

Pexels

பழங்காலத்திலிருந்தே பல பழக்கவழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அறிவியல் அடிப்படை இல்லாதவை. உதாரணமாக, குளித்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று கூறப்படுகிறது. இது எவ்வளவு உண்மை?

Pexels

குளித்துவிட்டு தண்ணீர் குடிப்பது நல்லதல்ல என்ற வாதம் பலரிடையே உள்ளது. ஆனால் இதற்கு என்ன காரணம்?

Pexels

குளிக்கும்போது உடலில் தண்ணீர் ஊற்றியவுடன் உடல் வெப்பம் குறையும் என்று அறிவியல் கூறுகிறது. குளிர்ந்த நீர் அல்லது வெந்நீர் உடலுக்கு குளிர்ச்சி தரும். உடல் மட்டுமின்றி உடலின் உள் வெப்பமும் குறைகிறது.

Pexels

குளித்த 15 முதல் 20 நிமிடங்களுக்கு உடல் உஷ்ணம் குறைவாக இருக்கும் என்கிறது அறிவியல். உடல் வெப்பத்தால் நிறைய நீர் ஆவியாகிறது. அதனால் குளித்த உடனே உடல் குளிர்ச்சியடையும்.

Pexels

உடல் குளிர்ச்சியாக இருக்கும்போது, ​​தண்ணீர் குடிப்பது திடீரென வெப்பநிலை சமநிலையை குறைக்கிறது. குறிப்பாக பல்வேறு உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பலர் கூறுகின்றனர்.

Pexels

இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. ஆனால் குளித்த பிறகு தண்ணீர் குடிப்பதால் உடலில் பிரச்னைகள் ஏற்படும் என்று பலர் நம்புகிறார்கள்.

Pexels

குளித்துவிட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதால் இந்த பிரச்னை ஏற்படாது மற்றும் வெப்ப சமநிலையை பாதிக்காது.

Pexels

செப்டம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்