சின்ன சியா விதையில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Pandeeswari Gurusamy
Apr 22, 2024

Hindustan Times
Tamil

ஹார்வேர்ட் ஹெல்த் கூற்றுப்படி சியா விதைகள் முழு புரதச்சத்துக்கள் நிறைந்தது. இதில் உடலுக்கும் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றை உடல் உருவாக்க முடியாது. இந்த அமினோ அமிலங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை. 

pixa bay

சியா விதைகளில் உள்ள மற்றொரு ஆரோக்கிய நன்மை, இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் நிறைந்தது. இதில் காஃபைக் அமிலம், மைரிசிடின், குயிர்சிட்டின், ரோஸ்மெரினிக் அமிலம் ஆகியவை அடங்கியது. 

pixa bay

ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து செல்களை பாதுகாப்பது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான். அவைதான் புற்றுநோய் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை. இதில் உள்ள பாலிஃபினால்கள், உங்களை ஆரோக்கியத்துடன் வைத்து, பல்வேறு நோய்களை தடுக்கிறது.

pixa bay

சியா விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. அவை வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. மேலும், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ட்ரைகிளிசரைட் அளவுகள், மாரடைப்பை தடுக்கிறது. 

pixa bay

சியா விதைகளில் இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. ஒருமுறை சியா விதைகளை சாப்பிட்டால் அதிலிருந்து 9 கிராம் கொழுப்பு கிடைக்கும். அதில் 8 கிராம் இதயத்துக்கு நன்மை தருவது.

pixa bay

சியா விதைகளில் எண்ணற்ற மினரல்கள் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் சிங்க் ஆகிய சத்துக்கள் உள்ளன. கால்சியம் மற்றும் மெக்னீசிய சத்துக்கள் ஆரோக்கியமான எலும்புகளுக்கு உதவுகிறது. 

pixa bay

சிங்க் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்புக்கும் உதவுகிறது. இதை உங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

pixa bay

சியா விதைகளில் கலோரிகள் குறைவாக இருக்கும். ஒரு ஸ்பூன் விதையில் 138 கலோரிகள் உள்ளது. இது நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இதை கலோரிகள் குறைந்த உணவில் சேர்த்து சாப்பிடும்போது உங்களுக்கு நீண்டநேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது.

pixa bay

சியா விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் கரையக்கூடியவை. இதுதான் இந்த விதைகளில் ஏற்படும் பிசுபிசுப்புத்தன்மைக்கு காரணமாகின்றன. இந்த நார்ச்சத்துக்கள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன. 

pixa bay

நாள்பட்ட நோய்களான இதய நோய், நீரிழிவு மற்றும் சில வகை புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் சியா விதைகள் பாதுகாப்பு அளிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது.

pixa bay

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்