பீட்ரூட்டின் தோலில் டீ செய்து குடிச்சா இத்தனை நன்மைகளா!
pixa bay
By Pandeeswari Gurusamy Sep 18, 2024
Hindustan Times Tamil
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
pixa bay
பீட்ரூட்டைப்போலவே அதன் தோல்களிலும் எண்ணற்ற ஆரோக்கியம் நிறைந்துள்ளது. பீட்ரூட் தோல்கள் உங்கள் சருமத்தை பாதுகாக்கின்றன. பீட்ரூட் தோல்கள் உங்களின் முகப்பருக்களை போக்குகிறது. முகத்திற்கு பொலிவைத்தந்து, சருமத்திற்கு புத்துணர்ச்சியைத்தருகிறது. பீட்ரூட்டில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பீட்ரூட் தோல்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. பீட்ரூட் தோலை உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால், அது தலையில் உள்ள அரிப்பு மற்றும் எரிச்சலைப்போக்குகிறது.
இறந்த செல்களை நீக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. பீட்ரூட்டைப்போலவே பீட்ரூட் தோலும் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, ரத்தம், சருமம் மற்றும் கல்லீரை சுத்திகரிக்கிறது. உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது, பீட்ரூட் தோலில் நைட்ரேட்கள் உள்ளன. இவை உடற்பயிற்சியின்போது நீங்கள் விரைவாக செயல்பட உதவும். நீங்கள் கடும் உடற்பயிற்சிகள் செய்யும்போது அதன் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
pixa bay
தேவையான பொருட்கள்
பீட்ரூட் தோல் – சிறிதளவு, பூண்டு – 1, தேன் – சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
pixa bay
பீட்ரூட் தோல் மற்றும் பூண்டு சேர்த்து அரை லிட்டர் தண்ணீருடன் கொதிக்கவிடவேண்டும். அது கால் லிட்டர் ஆகும் வரை கொதிக்கவிட்டு, வடிகட்டி, அதில் தேன், ஆலிவ் எண்ணெயையும் கலந்து பருகவேண்டும். இனிமேல் பீட்ரூட் தோலை தூக்கியெறியாதீர்கள். இதுபோல் செய்து பருகி உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
அக்டோபர் 05-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்