வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

By Pandeeswari Gurusamy
Jan 18, 2024

Hindustan Times
Tamil

நெல்லிக்காய், கறிவேப்பிலை, சீரகம், தயிர், உப்பு அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

pixa bay

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

pixa bay

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.

pixa bay

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.

pixa bay

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

pixa bay

சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

pixa bay

நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.

pixa bay

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீங்கள் நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

pixa bay

உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.

pixa bay

Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!