ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சு வலி.. நலமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்
arrahman Instagram
By Pandeeswari Gurusamy Mar 16, 2025
Hindustan Times Tamil
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
arrahman Instagram
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பியதாகவும், அப்போது அவருக்கு உடல் நலக் குறைவு இருந்ததாக கூறப்படுகிறது.
arrahman Instagram
இதைதொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
arrahman Instagram
ஏ.ஆர். ரஹ்மான் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
arrahman Instagram
மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
arrahman Instagram
ஆனால், இதுவரை அவரது உடல்நிலை குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. மருத்துவக் குழுவினரின் அறிக்கைக்குப் பிறகே இந்தத் தகவல்களை உறுதி செய்யவும் முடியும்.
arrahman Instagram
இதற்கிடையில் தொடர் பயணங்களால் ஏ.ஆர்.ரகுமான் களைப்பில் இருந்ததால் எடுக்கப்பட்ட மருத்துவமனை பரிசோதனைதான் இது. நீர் சத்து குறைபாடுதான். பயப்படும்படி எதுவும் இல்லை. ஏ.ஆர். ரகுமான் உடல் நலம் சீராக உள்ளதாக அவரது சகோதரி ஃபாத்திமா தகவல் தெரிவித்துள்ளார்.
arrahman Instagram
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், "இசைப்புயல்
ஏ.ஆர்.ரகுமான்
அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் "உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
arrahman Instagram
எளிமையான வெயிலுக்கு உகந்த மோர்க் குழம்பு செய்முறை எப்படி என தெரியுமா?