ஏப்ரல் 12ஆம் தேதி மேஷம் முதல் மீன ராசி வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள்!

By Marimuthu M
Apr 12, 2025

Hindustan Times
Tamil

மேஷம்: மேஷ ராசியினருக்கு உடலில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். 

ரிஷபம்: புதிய முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சிந்தனைகளின் போக்கில் குழப்பமும், தெளிவின்மையும் காணப்படும். 

மிதுனம்: மிதுன ராசியினருக்கு சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். 

கடகம்: கடக ராசியினருக்கு, உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு கிடைக்கும். 

சிம்மம்: வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோகப் பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி: மறைமுகமான எதிர்ப்புகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.

துலாம் ராசி: துலாம் ராசியினரே, தாயின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும்

விருச்சிக ராசி: விருச்சிக ராசியினரே, குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். 

தனுசு ராசி: தனுசு ராசியினரே, மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும்.

மகரம் ராசி: மகரம் ராசியினரே, நண்பர்களுக்கிடையேயான நட்பு வட்டம் விரிவடையும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். 

கும்பம் ராசி: கும்ப ராசியினரே, நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

மீன ராசி: மீன ராசியினரே, வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். 

வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்