வாழைப்பழங்களுக்கு இணையாக வாழைப்பழை தோல்களும் பல்வேறு நன்மைகள் கொண்டுள்ளன
By Muthu Vinayagam Kosalairaman Jan 30, 2025
Hindustan Times Tamil
வாழைப்பழத்தில் இடம்பிடித்திருக்கும் பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மயிர்கால்களுக்கு ஆரோக்கிமானதாக உள்ளது
இரவு முழுவதும் வாழைப்பழ தோலை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் இந்த நீரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறைவான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்
பின்னர் கொதித்த நீரில் இருக்கும் வாழைப்பழ தோல்களை எடுத்து அந்த நீரை குளிர்ச்சி அடைய வைக்க வேண்டும்
இந்த தண்ணீரை வடிகட்டி அதனை தலைமுடியில் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும்
பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை கழுவிவிட்டு, ஷாம்பு மற்றும் கண்டிஷனரை வைத்து கூட கழுவலாம்
வாரத்துக்கு இரண்டு முறை இந்த வாழைப்பழ தோல் ஜூஸை தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் நல்ல பலனை பெறலாம். மயிர்கால்கள் வலிமை அடைந்து தலைமுடி உதிர்வு தடுக்கப்படும்
எனவே வாழைப்பழம் சாப்பிட்டால் அதன் தோலை வீணாக்காமல் தலைமுடி பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்
உங்க குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!