நெல்லிக்காயில் அட்டகாசமான சுவையில் ரசம் வைக்கலாமா.. ஈஸியா எப்படி செய்வது பாருங்க
Canva
By Pandeeswari Gurusamy Mar 26, 2025
Hindustan Times Tamil
தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் -4 ஸ்பூன், மிளகு - 1 ஸ்பூன், மிளகாய் வத்தல் 1, சீரகம் - 1 ஸ்பூன், வர மல்லி - 1, பூண்டு - 10 பல், எண்ணெய் - 2 டீஸ்பூன், தக்காளி-2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெல்லிக்காய் சைஸ் - புளி, மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன், நெய் - 2 ஸ்பூன், கடுகு உளுந்து - 1 ஸ்பூன், பெருங்காயம், வெந்தயம் 1/4 ஸ்பூன், பெருங்காயம், கருவேப்பிலை ஒரு கொத்து கொத்தமல்லி சிறிதளவு
Pixabay
ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வர மல்லி, ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.
Pixabay
விதைகளை நீக்கிய 4 நெல்லிக்காய், பத்து பல் பூண்டு சேர்த்து நன்கு தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பேஸ்ட்போல அரைக்க கூடாது. ருசி மாறி விடும்.
Pixabay
பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நாம் தட்டி வைத்த இந்த நெல்லிக்காய் பூண்டு போட்டு வதக்கவும். பின்னர் அதில் நன்கு பழுத்த ஒரு தக்காளியை கையில் பிசைந்து சேர்க்க வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர், கொத்தமல்லியின் தண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி வேகம் அளவிற்கு கொதிக்க விடவும்.
Canva
பின்னர் ஒரு நெல்லிக்காய் சைஸ் புளி கரைசலை ஊற்றி கொத்தமல்லி தலையை தூவி விடவும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். ரசம் நுரை கட்டி கொதிக்க ஆரம்பிக்கும் போதும் அடுப்பை அணைக்க வேண்டும்.
Canva
பின்னர் தாளிப்பு கரண்டியில் ஒரு டீ ஸ்பூன் நெய், வெந்தயம், கடுகு உளுந்தம் சேர்த்து பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்
Canva
இதை ரசத்தில் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் ருசியான ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் ரெடி. சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
Pixabay
இந்தியாவில் போக்குவரத்து வசதிகளில் இரு சக்கர வாகனங்கள் மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பைக் இருக்கிறது. பைக்குகளை பராமரிக்க சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், மைலேஜ் அதிகரிக்கும். இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், பைக்கின் மைலேஜ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.