தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது.
அம்பேத்கரை தன் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக விஜய் அறிவித்தார்.
இந்நிலையில் விகடன் பிரசுரம் வெளியிடும் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளார்
இந்நிகழ்ச்சியானது வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கலந்துகொள்வார் எனப் பேசப்பட்ட நிலையில், விஜய் கலந்துகொள்வதால் திருமாவளவன் கலந்துகொள்ளவில்லை
திமுகவினரோடு கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், இந்த நேரம் திமுகவை விமர்சித்துப் பேசிய விஜய்யுடன் ஒரே மேடையில் தோன்றினால், அது வி.சி.கவுக்கு பின்னடைவை உண்டுசெய்யலாம் என நினைத்திருக்கிறார்.
அதனால் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை
நான் ஸ்ரீகாந்தின் வாய்ப்புகளை கெடுக்கவில்லை - வலைப்பேச்சு அந்தணன்