சூப்பரான 7 சமையல் குறிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்

By Karthikeyan S
Jul 01, 2024

Hindustan Times
Tamil

சிறிதளவு நெய்யில், கடுகுடன், ஐந்து முழு மிளகை சேர்த்து தாளித்தால், ரசம் நல்ல மணத்துடன் இருக்கும்

பிரிஜ்ஜில் உள்ள ஐஸ் கியூப் டிரேயில், ஏதாவதொரு பழச்சாறை ஊற்றி, கட்டியானவுடன் குழந்தைகளுக்கு ஜூசுடன் கலந்து கொடுத்தால் அவர்கள் விரும்பி குடிப்பார்கள்

பன்னீர் பட்டர் மசாலா செய்யும் போது இஞ்சி, வெங்காய விழுதை நன்றாக கிளறியதும், முந்திரி, கசகசா தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்த விழுதை கலந்து செய்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்

தயிர் வடைக்கு, உளுந்தம் பருப்புடன், ஆறு முந்திரி பருப்பை சேர்த்து ஊறவைத்து அரக்கவும். இந்த மாவில் வடை செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்த்து இட்லி மாவு அரைத்தால், மாவு சீக்கிரம் புளிக்காமல் நன்றாக இருக்கும்

அடை மாவு அரைக்கும் போது, அரை கப் சிறு பயிறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து செய்தால் ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் சத்தாகவும் இருக்கும்.

கோதுமை மாவை நன்கு சலித்து, சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்

திருமணத்திற்கு முந்தைய வழிபாட்டிற்காக கோயிலுக்கு வந்த அனந்த் அம்பானி, ரூ.6.9 கோடி மதிப்புள்ள கடிகாரத்தை அணிந்திருந்தார்