பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ' ராஜா ராணி ' சீரியல் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடித்த நாயகன் சஞ்சீவும், நாயகி ஆலியா மானசாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

By Kalyani Pandiyan S
Feb 01, 2025

Hindustan Times
Tamil

இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் இருவரும் இணைந்து அண்மையில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசினர். அப்போது ஆல்யா சஞ்சீவிற்கும், தனக்கும் நடந்த பிரேக் அப் குறித்து பேசினார்.

ஆல்யா பேசும் போது, ‘இப்போது எனக்கு பெரிதாக கோபம் வருவதில்லை; காரணம் என்னவென்றால், சஞ்சீவ் என்னிடம் எனக்கு பேபி போன்ற கோபபடாத ஆல்யாவைதான் மிகவும் பிடிக்கும். அதனால் நீ அப்படியே இருக்க வேண்டும் என்று கேட்டார். அதனால் நான் அப்படியே இருக்க பழகிவிட்டேன்.

முன்பெல்லாம் அப்படி இல்லை. ஆனால், முன்பெல்லாம் அப்படி கிடையாது மிக அதிகமாக கோபப்படுவேன்; அந்த சமயத்தில்தான் எங்களுக்குள் பிரேக்கப் ஆனது; இந்த நிலையில், பிரேக்கப் ஆனவருடன் சீரியலில் எப்படி ஒன்றாக இணைந்து நடிக்க முடியும்.எப்படி நெருக்கமான காட்சிகளை அணுக முடியும் என்ற கேள்வி எனக்கு எழுந்தது.

இதனையடுத்துதான், நான் படக்குழுவிடம் சென்று, இந்த சீரியலில் ஒன்று அவர் நடிக்க வேண்டும், இல்லை நான் நடிக்க வேண்டும் நீங்களே முடிவு எடுங்கள் என்று கூறிவிட்டேன்.  

பிரேக்கப் ஆன வாரம் முழுக்க, முழுக்க கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். சொல்லப்போனால் அழுது கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் அதனால் வீசிங் வந்து, மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டேன்.

நண்பர் மூலமாக சமரசம் பேச, அவரை தொடர்பு கொண்டு பேசி, சஞ்சீவை சந்திக்கச் சென்றேன். ஆனால் என்னை பார்த்தவுடன், இவர் ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்.' என்று பேசினார் 

’மீண்டும் உயரும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!