அல்லு அர்ஜூன் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,
By Suguna Devi P Dec 13, 2024
Hindustan Times Tamil
புஷ்பா 2 ப்ரீமியர் காட்சியின் போது பெண் ரசிகர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தெலுங்கு மாநிலங்களில் அதிர்ச்சியை கிளப்பியது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5 அன்று உலக அளவில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இதில் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ப்ரீமியர் ஷோ பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திரையரங்கத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அல்லு அர்ஜூன் படத்தின் புரோமோசன் செய்வதற்காகவே முன்னறிவிப்பின்றி அந்த தியேட்டருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் இழப்பீடு தொகையும் வழங்கியுள்ளார்.
புஷ்பா 2 படத்தின் வசூல் ரூ.1000 கோடியை தாண்டி சென்று வருகிறது. மேலும் இந்த நிலையில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கும் அல்லு அர்ஜுன் உடனடியாக நீதிமன்றத்தை நாடினாலும் ஜாமின் கிடைக்காத பட்சத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்கிற காரணத்தால் கண்டிப்பாக சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
வெண்டைக்காய் நீர் பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்