உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ரோஜா பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள் இதோ..!

Canva

By Karthikeyan S
Apr 07, 2025

Hindustan Times
Tamil

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ரோஜாவின் பெயர் ஜூலியட் ரோஸ். களிமண், செம்மண் மற்றும் மணல் என ஜூலியட் ரோஜா செடி அனைத்து மண்ணிலும் வளரும்.

Instagram

வழக்கமான ரோஜாவைப் போல் இதை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கென்று சிறப்பு கவனம் தேவைப்படும். இந்த அரிய ரோஜாவை புகழ்பெற்ற பூக்கள் நிபுணரான டேவிட் ஆஸ்டின் என்பவர் உருவாக்கினார்.

Instagram

கிட்டதட்ட 15 ஆண்டுகள் பல்வேறு வகை ரோஜாக்களை கலப்பினச் சேர்க்கை செய்து பரிசோதித்து இறுதியாக 1978-ல் தான் இதை அவரால் உருவாக்க முடிந்தது.

Instagram

ஷேக்ஸ்பியரின் பிரபல கதாபாத்திரங்களான 'ரோமியோ - ஜூலியட்' என்பதில் பெண் கதாபாத்திரம், ஜூலியட்டின் நினைவாகவே இந்த ரோஜாவுக்கு ஜூலியட் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Canva

கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாய்க்கு இந்த ரோஜா விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச விற்பனைத் தொகை ஆகும்.

Canva

தற்போது இந்த ரோஜாவின் விலை இந்திய மதிப்பில் சுமார் 130 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த ரோஜா என்ற பெருமை மட்டுமல்ல உலகிலேயே மிக அழகானது ஜூலியட் ரோஸ்.

Instagram

இது மற்ற வகை ரோஜாக்களில் இல்லாத தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை வாடாமல் அல்லது உலராமல் புத்துணர்ச்சியுடன் இருக்குமாம்.

Instagram

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock