'கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் கேரளாவில் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான சுற்றுலா தளங்கள் உங்கள் பார்வைக்காக..

By Karthikeyan S
Apr 07, 2025

Hindustan Times
Tamil

திருச்சூரில் சாவக்காடு கடற்கரை, வதனப்பள்ளி கடற்கரை, பெரியம்பலம் கடற்கரை என கடற்கரைகள் ஏராளமாக உள்ளன. மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாக இருக்கும் குருவாயூர் கோவில் இங்கு உள்ளது.

இயற்கையை அதிகம் ரசிக்க விரும்புபவர்கள் தேடிச் செல்லும் இடமாக இருக்கிறது தேக்கடி.  வனவிலங்குகள் சரணாலயம், தேயிலை, காப்பி தோட்டம், நறுமணம் வீசும் மசாலா பயிர் தோட்டங்கள் என சுற்றிபார்க்க ஏராளமான இடங்கள் இங்குள்ளன.

கொச்சியில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆலப்புழா. இது கேரளாவில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். படகு சவாரி செய்ய விரும்புபவர்களுக்கு இது ஏற்ற இடமாகவும் உள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில்  அமைந்துள்ளது மூணாறு. ஆடுக்காடு நீர்வீழ்ச்சிகள், லக்கம் நீர்வீழ்ச்சிகள், நைமக்காடு நீர்வீழ்ச்சி ஆகியவை பிரபலமாக உள்ளது.

கோவில்கள், சூரிய அஸ்தமன காட்சிகளுக்கு புகழ்பெற்ற இடமாக இருக்கிறது கோவளம். இங்குள்ள கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாக உள்ளது.

புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இதுவும் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். இங்குள்ள அருங்காட்சியகத்தில் அரசு குடும்பத்தின் மதிப்புமிக்க பொருட்கள் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கேரளாவின் முக்கிய துறைமுக நகரம் மற்றும் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடமாக விளங்குகிறது கொச்சி. ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயங்கள் ரசனை மிகுந்ததாக காட்சி அளிக்கும்.

உங்கள் நாளைத் தொடங்க ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்

Photo Credit: Pexels