Siddharth: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.
By Kalyani Pandiyan S Sep 16, 2024
Hindustan Times Tamil
மேலும் அதில், " நீ தான் என்னுடைய சூரியன்..நீ தான் என்னுடைய சந்திரன்.. நீ தான் என்னுடைய எல்லா நட்சத்திரங்களும்.. நித்தியத்திற்கும் ஆத்ம தோழர்களாக இருப்பதற்கு.. சிரிப்பதற்கு, வளரமால் வாழ்வதற்கு.. நித்திய அன்பு, ஒளி மற்றும் மேஜிக்குடன்... சித்தார்த் மற்றும் அதிதி" என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். அதேபோல் பாலிவுட் நடிகையாக இருந்து வந்த அதிதி ராவ், தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த 2021ம் ஆண்டு வெளியான மஹா சமுத்திரம் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். அதேபோல் பாலிவுட் நடிகையாக இருந்து வந்த அதிதி ராவ்,
தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியான மஹா சமுத்திரம் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. இது குறித்தான தகவல்கள் அங்குமிங்கும் அரசல் புரசலாக பரவி வந்த நிலையில், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்து கொண்ருந்தது அவர்கள் காதலித்து வருவதை கிட்டத்தட்ட உறுதிபடுத்தியது.
இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களின் நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது ரிலேஷன்ஷிப்பை சித்தார்த்தும் - அதிதியும் உறுதிபடுத்தினர்.
மகரம் ராசியை விட்டு விலகும் ஏழரை சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா? காத்து இருக்கும் சக்ரவர்த்தி வாழ்கை!