நடிகை குஷ்பு தான் உடல் எடையை குறைத்த காரணத்தை புதிய தலைமுறை சேனலுக்கு கொடுத்த பேட்டியில் மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார்.
By Kalyani Pandiyan S Apr 23, 2025
Hindustan Times Tamil
இது குறித்து அவர் பேசும் போது, ‘எனக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக இந்தியாவில் செய்யப்படும் இனிப்புகள் என்றால் சொல்லவே வேண்டாம். அதனால், எங்கேயாவது இனிப்பை பார்த்தேன் என்றால், ஆசையில் உடனே எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். இதனால் உடல் எடை அதிகமாகிவிடும்.
அதிர்ஷ்டவசமாக எனக்கு சர்க்கரை நோயோ, இரத்த அழுத்தமோ கிடையாது. ஆனால் எனக்கு முட்டியில் பிரச்சனை இருக்கிறது. ஆம், முட்டியில் அடிபட்டு கிட்டத்தட்ட அதற்காக மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மருத்துவர் என்னிடம் நீங்கள் உங்களது முட்டிக்காகவாது நீங்கள் எடையை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
முன்பெல்லாம் ஆறு முதல் ஏழு கப் அளவு டீ குடிப்பேன்; அதையும் குறைத்தேன். ஒரே வேளையில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, அதைப் பிரித்து 6 வேளையாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டேன். நிறைய மோர், இளநீர் குடித்தேன். பழச்சாறுகள் அருந்துவதில்லை.
என்னுடைய உடலுக்கு எது ஒத்துக் கொள்கிறது, எது ஒத்துக் கொள்ளவில்லை என்பதை பார்த்து, புரிந்து கொண்டு அதெற்கேற்றார் போல வாழ்க்கையை மாற்றிக்கொண்டேன்.
எல்லோரும் குஷ்பூ இட்லி போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அது எவ்வளவு கஷ்டங்களை கொண்டு வரும் என்பது நமக்கு தான் தெரியும்.’ என்று பேசினார்.
நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.