பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினை நடந்த போது, விஜயகாந்திற்கு நடந்த அவமானம் குறித்தும், அதனை அவர் அணுகிய விதம் குறித்தும், பிரபல நடிகையாக குஷ்பு பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
By Kalyani Pandiyan S Jul 10, 2024
Hindustan Times Tamil
அவர் மக்களின் தலைவர்: இது குறித்து அவர் பேசும் போது, “விஜயகாந்திற்கு உடல் நலம் மட்டும் சரியாக இருந்திருந்தால், அவர் என்று தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருப்பார். சிலரை மக்களின் தலைவர் என்று சொல்வார்களே, அது அவருக்கு மிகச் சரியாக பொருந்தும். அவருக்கு மக்கள் மத்தியில் எப்பேர்பட்ட செல்வாக்கு இருந்தது நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
அவருக்கு தைரியம் மிகவும் அதிகம்.
அவர் நடிகர் சங்க தலைவராக இருந்த பொழுது, நடிகர், நடிகைகளுக்கு ஏதாவது ஒரு விஷயத்தால் நல்லது நடக்கும் என்றால், அதற்காக அவர் கீழே கூட உட்கார தயாராக இருப்பார். பெப்சி பிரச்சினை நடந்து கொண்டிருந்த பொழுது, மும்பையில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அப்போது தொழில்நுட்ப கலைஞர்களின் தலைவர் ஒருவர் மிகவும் பந்தா செய்து கொண்டிருந்தார்.
விஜயகாந்த் அவர்கள் இருந்த ஹோட்டலுக்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை; ஆனாலும், அவர் அங்கு சென்றார். அங்கு அவருக்கு உட்காருவதற்கு சேர் கூட போடப்படவில்லை. வந்தவர்கள் அனைவரும் ஹிந்தி காரர்கள். ஹிந்தியில் விஜயகாந்தை பார்த்து இவரெல்லாம் ஒரு ஹீரோ என்று கிண்டல் செய்தார்கள். நானும் விஜயகாந்த் சார் உடன் சென்றிருந்தேன்.
எனக்கு அதை பார்த்தவுடன் மிகவும் கோபம் வந்துவிட்டது. இதையடுத்து நான் அவர்களுடன் சண்டைக்குச் சென்றேன். அப்போது விஜயகாந்த் என்னை தடுத்து, நமக்கு காரியம் ஆக வேண்டும் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேள் என்று மிகவும் தாழ்மையோடு நடந்து கொண்டார். ஆனால், நான் கடைசி வரை விட்டுக் கொடுக்கவில்லை..
அவரிடம்.. சார்… அவர்கள் உங்களுக்கு உட்காருவதற்கு சேர் கொடுக்க வேண்டும், என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே….விஜயகாந்த், இல்லை அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
எனக்கு சேர் வேண்டாம். நாம் நிற்கலாம். நீ அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேள் என்று கூறினார். அப்படித்தான் அவர் அந்த பிரச்சினையை அணுகினார். அவரைப் போன்ற ஒரு சொக்கத்தங்கத்தை தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியாது;அவர் அந்த அளவுக்கு நடிகர் நடிகைகளுக்கு செய்து இருக்கிறார்.” என்று பேசினார்
உங்கள் வீட்டிலேயே பாகற்காயை வளர்ப்பது எப்படி பார்க்கலாமா.. இதோ எளிய டிபஸ்!