தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்னர்

By Divya Sekar
Nov 16, 2024

Hindustan Times
Tamil

அவர் மீது புகார்களும் குவிந்துள்ளது

வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது

அவர் ஐதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேடினர்

ஆனால் அந்த வீட்டையும் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டது போலீசாருக்கு தெரிய வந்தது

இதனால் தனிப்படை போலீசார் ஐதராபாத், ஆந்திராவில் முகாமிட்டு தேடி வருகின்றனர். 

 ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் 

இதற்கிடையில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

நார்ச்சத்து மிக்க உணவுகளை உங்கள் டயட்டில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்