அப்பா பெண் உறவை அடித்துக் கொள்ளவே முடியாது.அவர்களுக்கு இடையில் அப்படியான ஒரு கனெக்சன் இருக்கிறது. அவர் குழந்தையை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்.  குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் அபிராமி பேட்டி!

By Kalyani Pandiyan S
Apr 03, 2024

Hindustan Times
Tamil

நீங்கள் குழந்தையை வளர்த்துப் பார்த்தீர்கள் என்றால் தெரிந்து இருக்கும். முதல் இரண்டு வருடங்களுக்கு அந்த குழந்தைக்கு சரியான விதத்தில் தான் நினைப்பதை சொல்லத் தெரியாது. ஒன்று சிரிக்கத் தெரியும் அல்லது அழ தெரியும். 

அதை நாம் பார்த்து, தற்போது குழந்தைக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

சில சமயங்களில் நாம் குழந்தைக்கு பால் கொடுப்போம். தொளில் தூக்கிப் போட்டு உலாத்துவோம். ஆனால், என்ன செய்தாலும் குழந்தை அழுவதை நிறுத்தாது. ஆனால் நாம் பொறுமையாக இருந்து, குழந்தையை சமாதானப்படுத்த வேண்டும். 

நாங்கள் கல்கியை வீட்டுக்கு அழைத்து வந்த முதல் இரண்டு வாரங்களில், அவள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தாள். அப்போது ராகுல் என்னிடம், உனக்கு ஒரு கட்டத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டு வரலாம்.

. இந்தக் கோபம் உன்னிடம் இருந்து குழந்தைக்கு கடக்கும் முன்னர் என்னை கூப்பிட்டு விடு. நானும் அந்த மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பொழுது, உன்னை கூப்பிட்டு விடுகிறேன். இதில் நாம் ஒருவருக்கொருவர் அவமானப்பட்டு கொள்ள தேவையில்லை என்றார். 

திருமணத்துக்கு முன் இதைப் புரிஞ்சுக்கங்க!