Actress Abhirami: எடை கூடிய போது, எதிர்கொண்ட மனவேதனைகள் குறித்து நடிகை அபிராமி கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.
By Kalyani Pandiyan S Jun 18, 2024
Hindustan Times Tamil
மீடியாவில் இருந்து மட்டுமல்ல, வெளியில் இருந்தும், எனக்கும் பாடி ஷேமிங் (உடல் ரீதியான கேலிகள்) நடந்திருக்கிறது. நான் ஆரம்பம் முதலே கொஞ்சம் உயரமாக இருப்பேன். அதனாலேயே, நான் பலவகையான பாடி ஷேமிங்கிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறேன். இடையே, எடை கூடி குண்டாகி இருந்தேன். அதை பார்க்கும் சிலர், என்ன இப்படி குண்டாகிவிட்டாய் என்று சர்வ சாதரணமாக கேட்பார்கள்.
ஆனால், அது எதனால் நடந்து இருக்கிறது. நாம் ஏதாவது மருத்துவ ரீதியான பிரச்சினைகளால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோமோ இல்லை, மனஅழுத்தத்தில் இருக்கிறோமோ என்பது பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு உதாரணம்தான்.. இதை தவிர்த்து என்ன கருத்துவிட்டாய்... முடியெல்லாம் கொட்டி விட்டதே.. முடியெல்லாம் வெள்ளையாகிவிட்டதே.. என்று கேட்டும் வார்த்தைகளால் சங்கடப்படுத்துவார்கள்.
இது எல்லோருக்கும் நடக்கக்கூடியததுதான். நான் எடை கூடி இருந்த போது, என்னுடைய போட்டோவை பார்க்கும் போது, எனக்கே ஒரு மாதிரிதான் இருக்கும். காரணம், அந்த நேரத்தில் உடல்ரீதியான பல்வேறு காரணங்களால், என்னுடைய எடை கூடி இருந்தது. அதை என்னால் அப்போது நன்றாகவே புரிந்து கொள்ள முடியாது.
நான் அப்போது அதை இரண்டு விதமாக பிரித்தேன். நான் ஹெல்தியாக இருக்கிறேனா? இல்லை ஹெல்தியாக இல்லையா? என்பதாக அது இருந்தது. இப்போது நான் உடல்ரீதியாகவும், எமோஷனலாகவும் ஹெல்தியாக இருக்கிறேனா? இல்லையா என்பதில்தான் என்னுடைய போக்கஸ் இருந்தது. இன்றைக்கும் நான் என்னுடைய எடை மெஷின் எண்கள் அதிகரிப்பதை பற்றி கவலைப்படுவதில்லை.
மனரீதியான பரிசோதனை சார்ந்த முடிவுகளின் எண்களும், உடல்ரீதியான பரிசோதனை சார்ந்த முடிவுகளின் எண்களும்தான் எனக்கு முக்கியம். பிறவற்றை நான் கண்டுகொள்வதில்லை. “ என்று பேசினார்.
உடலின் மிக முக்கியமான பகுதி கல்லீரல். உடலில் உள்ள அனைத்தும் சரியாக வேலை செய்தால் நன்றாக வேலை செய்யும்.