நடிகர் ஸ்ரீ மனநலக்கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது 

By Kalyani Pandiyan S
Apr 15, 2025

Hindustan Times
Tamil

இந்த நிலையில் அவருக்கு என்ன ஆனது, அவர் தற்போது எப்படி இருக்கிறார், எங்கு இருக்கிறார் உள்ளிட்ட விபரங்களை அவருடைய தோழி டாட்டி டேவிட் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, ‘நடிகர் ஸ்ரீக்கு மூளையில் பிரச்சினை இருந்திருக்கலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும், அதனை அதிகரிக்கக்கூடிய சூழ்நிலையில்தான் அவன் தொடர்ந்து இருந்திருக்கிறான்.

என்னுடைய தோழி ஒருவர் இருக்கிறார். அவரிடம்தான் தன்னுடைய உடல்நலம் சார்ந்த தகவல்களை ஸ்ரீ பகிர்ந்திருக்கிறான். 

அப்போதுதான் அவனுக்கு schizophrenia என்ற நோய் இருப்பதை கூறினான். 

மேலும், அவன் தன்னுடைய காதில் குரல் ஒன்று கேட்கிறது என்றும் அந்தக் குரல் உண்மை இல்லை என்பது தெரிந்தாலும், அதனை தன்னால் தடுக்க முடியவில்லை என்றும் கூறி இருக்கிறான்.

அவன் தற்போது முழுக்க முழுக்க கனவுலகில் வாழ்ந்து வருகிறான். அவன் தனக்கான மாத்திரைகளை நிறுத்தும் போது இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துவான்.' என்று பேசினார். 

நீங்கள் சொல்வதற்கு உங்கள் குழந்தைகள் கீழ்படியவில்லையென்றால், அவர்களிடம் நீங்கள் கத்திக்கொண்டு இருக்காமல் இதைச் செய்யுங்கள் பலன் கிட்டும்.