மணிரத்னம் ரொம்ப சைலண்ட் அவர் பேசும் போது, “ திருடா, திருடா படத்துல மணி சார் கூட வொர்க் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைச்சிச்சு. சார் ரொம்ப ரொம்ப சைலண்ட். அதிகமா பேச மாட்டார். பத்து வார்த்தை பேசுற இடத்துல, இரண்டு வார்த்தை பேசிட்டு போயிடுவார். 

By Kalyani Pandiyan S
Aug 02, 2024

Hindustan Times
Tamil

அவர் ஒரு மாதிரி ஸ்டைலா சீனை சொல்லிக்கொடுப்பார். அவர்கிட்ட இருக்குற இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்ன அப்படின்னா, அந்த சீனை நம்மளால பண்ண முடியும் அப்படிங்கிற நம்பிக்கைய, நமக்குள்ளயே விதைச்சிடுவார். அதனால நமக்கே அவர் அந்த சீனை அவர் எப்படி எடுக்கப்போறார் அப்படிங்கிற ஆர்வம் வந்துரும். அவர் கூட வேலை பார்த்தது ரொம்ப ஜாலியான அனுபவம்

எல்லாமே பிரமாண்டம்தான்  ஷங்கர் சாரை பொருத்தவரை, எல்லாமே பிரமாண்டமா இருக்கும். அவர் ஒரு சூப்பரான திங்கர். அவர்கிட்ட கற்பனை வளம் சும்மா அப்படி இருக்கும். எல்லாராலும், எப்படி வேணாலும் யோசிக்க முடியும். ஆனா, அத செயல்படுத்துறது ரொம்ப கஷ்டம். ஆனா, ஷங்கர் சார் தான் யோசிக்கிற எல்லாத்தையும் செயல்படுத்தி திரையில கொண்டு வந்துருவாரு. அது, அவர் போன்ற சில பேராலதான் முடியும்.

சுந்தர் சி எப்படி?  சுந்தர்.சி டைரக்டர் என்பதையும் தாண்டி, அவர் சூப்பரான மனிதர். அவர் ஒரு நடிகராக என்ன வேணாலும் பண்ணுங்க அப்படின்னு நமக்கு முழு சுதந்திரம் கொடுத்துருவார். வின்னர் படத்திலும், லண்டன் படத்திலும் அவருடன் ட்ராவல் பண்ண போது, அவ்வளவு ஜாலியா வேலை பார்த்தோம். அவர் எல்லா விஷயங்களையும் ரொம்ப கேஷூவலாக எடுத்துப்பார். எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருப்பார். அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டும் அப்படித்தான் இருக்கும்.

அப்பா ஸ்டைல் வேறு மாதிரி அப்பா தியாகராஜன் பொருத்தவரை, அவர் ஒரு பயங்கரமான யூனிவர்சிட்டி. பழைய காலத்து டெக்னாலாஜியையும், புது காலத்து டெக்னாலாஜியையும் பேலன்ஸ் செய்து வேலை செய்வார். அவர்கிட்ட இருந்து தினமும் நான் ஏதாவது ஒன்ன கத்துக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு டைரக்டருக்கும், ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இவருடைய ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமானது. 

அசத்தல் சுவையான ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி; நாவில் எச்சில் ஊறும்; நாள் முழுவதும் சுவைக்க தோன்றும்!