பிரபல நடிகரான பார்த்திபன் தனக்கும், தன்னுடைய முன்னாள் மனைவிக்கும் இடையே நடந்த பிரிவு குறித்து பேசி இருக்கிறார்.
By Kalyani Pandiyan S Jul 09, 2024
Hindustan Times Tamil
இது குறித்து கலாட்டா சேனலுக்கு அவர் பேசும் போது, “ இந்த கலாச்சாரம் நமக்குள் சில விஷயங்களை தானாகவே புகுத்தி இருக்கிறது. அது, இந்த பிரிவில் இருக்கக்கூடிய வருத்தங்கள், வேதனைகளெல்லாம் நமக்கு எதற்கு?.. அதை அனுசரித்து சமாளித்து, சென்று விடலாமே என்பது மாதிரியான ஒரு பார்வையை நமக்கு கொடுத்திருக்கிறது.
சமாளித்து வாழ வேண்டாம் எங்கெல்லாம் தவறு நடந்தது, அந்த இடங்களையெல்லாம் பார்த்து சரி பண்ண முயற்சி செய்யலாமே என்று நினைக்கிறோம். காதலிப்பது என்பது, அந்த மொமெண்டிற்கு அது மிகச் சரியான விஷயம் தான். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் வெவ்வேறு உலகம் இருக்கிறது. இருவரும் இணைந்து ஒரே கட்டிலில் இணைந்து, சில உருவங்களை உருவாக்குகிறார்கள். அது உடல் சம்பந்தப்பட்டது.
நம் மனதிற்கு, நம் மீதே ஒரு நாள் கோபம் வரும். நம் மீதே, நமக்கு ஒருநாள் வெறுப்பு வரும். என்னை பொருத்தவரை, காதல் சமூகம், கடவுள் இந்த மூன்றுமே இல்லை. இல்லாத ஒன்றை நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது வசதிக்கு அதை வளைத்துக்கொண்டிருக்கிறோம். நாம் சந்தோஷமாக இருக்கும் வரை, அது சந்தோஷமாகத்தான் இருக்கும். சந்தோஷமாக இல்லாமல் போகும்பொழுது, நமக்கே மூச்சு முட்ட ஆரம்பித்து விடும். அதிலிருந்து எப்படிடா வெளியே வருவது என்ற எண்ணம் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு வலியை நாம் நமக்கு கொடுக்க வேண்டாம். வாழ்க்கை என்பது ஒரு முறை தான்.
பிரிவை ஏற்றுக்கொண்டோம் எங்களைப் பொறுத்தவரை நாங்கள், அந்தப் பிரிவை ஏற்றுக் கொண்டோம். ஆனால், அந்த பிரிவை எங்களுடைய குழந்தைகள் புரிந்து கொள்வது க்ஷ்டமான ஒன்றாக இருந்தது. அந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது, எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். என்னை பொருத்தவரை, காதல் என்பது சுதந்திரம்
நான் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னை காதலித்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையே அவளுக்கு வேறொருவர் மீது பிரியம் வந்துவிட்டது. நான் அவளிடம் மிகவும் நாகரிகமாக, நீ அவனிடமே சென்று விடு என்று கூறி விட்டேன். அவ்வளவுதான். காதல் என்பது பட்டாம்பூச்சி போல தான் அது மீண்டும் வந்தால் வரட்டும், வராவிட்டாலும் பரவாயில்லை” என்று பேசினார்.