மலையாள நடிகர் மோகன்லால் அவரது 37 ஆவது திருமண நாளை கொண்டாடுகிறார். திருமண நாளில் அவரது மனைவியை முத்தமிட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
By Suguna Devi P Apr 28, 2025
Hindustan Times Tamil
மோகன்லாலும் சுசித்ராவும் ஏப்ரல் 28, 1988 அன்று திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து 37 ஆண்டுகளாக இவர்களது திருமண பந்தம் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்து வருகிறது.
சுசித்ரா ஒரு திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மறைந்த தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான கே. சுசித்ரா, பாலாஜியின் மகள்.
64 வயதான மோகன்லால் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான திரையுலக வாழ்க்கையைக் கொண்டுள்ளார், அதில் அவர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மோகன்லால்- சுசித்ரா மோகன்லால் தம்பதியருக்கு பிரணவ் மற்றும் விஸ்மயா என்ற ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர் சமீபத்தில் நடிகர் பிருத்திவிராஜ் இயக்கத்தில் எல் 2 எம்புறான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
மோகன்லாலின் மகள் விஸ்மயா எழுத்துத் துறையில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். , மேலும் சமீபத்தில், தாய்லாந்தின் கோ சாமுய் நகரில் தற்காப்புக் கலையான முய் தாய் பயிற்சி பெற்று வந்தார்.
மோகன்லால் மலையாளம் மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
சும்மா கமகமன்னு ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பாத் செய்வது எப்படி?